உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது. அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன. இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 88,443 வாக்குகள் - 135 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி - 56,615 வாக்குகள் - 81 உறுப்பினர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 51,046 வாக்குகள் - 79 உறுப்பினர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 35,647 வாக்குகள் - 46 உறுப்பினர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 18,011 வாக்குகள் - 32 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் கூட்டணி - 11,893 வாக்குகள் - 15 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி - 4,103 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி - 3,397 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு இலக்கம் 1 - 2,402 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் சுயேட்சைக்குழு இலக்கம் 2 - 3,973 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் |