தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு - புதிய அமைப்பு
வரும் திங்கட்கிழமை ( 18.3.2013 ) தமிழக கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு என்ற புதிய அமைப்பினர் இதனை அறிவித்தனர்.
எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது: உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களிடையே சிம்பு பேச்சு
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக
தமிழ் நடிகனின் முன்மாதிரி -சிம்பு மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேரடி விசயம்
அதிர அதிர அடியெடுத்து வையுங்கள். அனைத்தும் வசப்படும். --------------------------------------- பாராட்டுக்களை கூறியே ஆகவேண்டும். மத்திய அரசு கூடுதலாகவே மிரட்டும். கண் வைக்கம். சம்பாதிக்கும் பணத்திற்க கணக்கு கேட்கிறேன் பேர்வழி என்று சண்டித்தனம் செய்யும். குறிவைத்து பிடிக்கலாம். ஏதாவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். புதியதாக சிம்புவை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களை மிரட்டலாம். அந்த தயாரிப்பாளரின் வீட்டிற்குள் வருமான வரி என்று நுழைந்து மிரட்டலாம். எப்படி பார்த்லும் சிம்புவிற்கு இழப்புதான். கஷ்டம்தான். அது தெரிந்திருக்கலாம். இப்படி பலதையும் யோசிக்காமல் வந்திருக்கமாட்டார். அவரின் துணிந்த இந்த ‘மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு” என்ற முடிவை பாராட்டத்தான் வேண்டும்.
இன்னும் பலர் இப்படி வந்தாலும்... மாணவர்களின் போராட்டம் மாணவர் போராட்டமாகவே நீடிக்க வேண்டும்.
இறுதிக்கட்டப் போரில், இராணுவத்திடம் சரணடைந்த தமிழ் இளைஞர்களை இராணுவம் எவ்வாறு கொன்றது ? திடுக்கிடும் புது ஆதாரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. லண்டன் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இக் காணொளி வெளியிடப்படவுள்ளது
அல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அப்தெல்ஹமீட் அபு சையத், கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவித்துள்ளது பிரான்ஸ் ராணுவம். அல்-காய்தாவின் ஆபிரிக்க தளபதியான இவர், மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்தும் யுத் தத்தின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால்,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி : ரயில் முன்பு தண்டவாளத்தில் மாணவர்கள் தலை வைத்து ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
மன்னார்குடி பாலிடெக்னிக் மாணவர்கள் உண்ணாவிரதம் ( படங்கள் )
ராஜபக்சே மீது போற்குற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு, போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி செருமங்கலம் சதாசிவம் கதிர்காமவள்ளி பாலிடெக்னிக் மாணவர்கள் தொடர் பல்வேறு கோரிக்கைகளுடன் தொடர் உண்ணாவரதம் தொடங்கியுள்ளனர்.
ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு அருகே புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள்
இலங்கையில் தமிழர்கள் மீது போர்க்குற்றம் புரிந்த இரக்கமற்ற ராஜபக்சேவின் இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. நாளை ( 15.3.2013 ) காலை 10மணிக்கு சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கண்டன உரையாற்றுகிறார்.
ஈழத் தமிழ் மக்களுக்காக இன்று மதுரை குலுங்கிய காட்சி காணீர் .. குலுங்க…குலுங்க.. ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி..
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இந்திய பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.