புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013

அல்-காய்தாவின் ‘அதி பயங்கர தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அப்தெல்ஹமீட் அபு சையத், கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவித்துள்ளது பிரான்ஸ் ராணுவம். 
அல்-காய்தாவின் ஆபிரிக்க தளபதியான இவர், மாலியில் பிரான்ஸ் ராணுவம் நடத்தும் யுத்
தத்தின்போது கொல்லப்பட்டிருக்கலாம் என பிரான்ஸ் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால்,
கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படும் தளபதி அபு சையத்தின் உடல், பிரான்ஸ் ராணுவத்திடம் சிக்கவில்லை.

இந்த அபு சையத், கடத்தல்காரராக இருந்து, அல்-காய்தாவுக்கு சென்றவர். அல்-காய்தாவுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை பணயக் கைதிகளை கடத்துவதன்மூலம் பெற்றுக் கொடுத்தவர். 2008-ம் ஆண்டுவரை 20 ஐரோப்பிய, அமெரிக்க பணயக் கைதிகளை கடத்தியுள்ள இவர், இரு பணயக் கைதிகளை கொன்றிருக்கிறார்.

தற்போது மாலி நாட்டில், அத்ரார் டெ இஃபோகாஸ் மலைப் பகுதியில், அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினருக்கும், பிரான்ஸ் ராணுவத்துக்கும் நடைபெறும் யுத்தத்தில் இவர் கொல்லப்பட்டதாக தமக்கு உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக பிரான்ஸ் ராணுவ தளபதி Edouard Guillaud தெரிவித்தார். இப்போதுள்ள சிக்கல் என்னவென்றால், இந்த அபு சையத் கொல்லப்பட்டபோது, அவரிடம் 7 வெளிநாட்டு பணயக் கைதிகள் இருந்தனர். அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

ad

ad