புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013



தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மணிவண்ணன் அவரது மகன் நடிகர் ரகுவண்ணனுக்கு ஈழத் தமிழ்ப் பெண்ணை மணமுடிக்க உள்ளார்.

'மாறன்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் கண்டவர் ரகுவண்ணன். தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்தாலும் இவரால் திரைத்துறையில் பிரபலம் அடைய முடியவில்லை. இருப்பினும் மணிவண்ணன் தன்னுடைய மகனை முன்னணி நடிகராக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி இப்போது தான் இயக்கி வரும் 'நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ' எனும் படத்தில் மகனுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து மகனை நாயகனாக்கி 'தாலாட்டு மச்சி தாலாட்டு' என்ற படத்தை இயக்கி தயாரிக்கவும் இருக்கிறார்.
ஈழத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மணிவண்ணன் தன்னுடைய மகன் ரகுவண்ணனுக்கு ஈழத்து தமிழ்ப் பெண் ஒருவரை மணமுடிக்க இருக்கிறார். ரகுவண்ணனை மணமுடிக்க இருக்கும் அந்தப் ஈழத்து தமிழ்ப் பெண்ணின் பெயர் அபி. அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மணிவண்ணனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். திருமணம் வரும் ஜூன் மாதம் விமரிசையாக நடக்கவிருக்கிறது.

ad

ad