புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013




          "ஊரு உலகத்துல நடக்காததா? என்னமோ பெரிசா தப்பு பண்ணிட்ட மாதிரில்ல.. வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறீங்க.. ஒழுங்கு மரியாதையா போயிடுங்க.. ஆசிரியர்கள் நாங்கள்லாம் ஒண்ணு சேர்ந்தா.. அப்புறம் நடக்கிறதே வேற.' ’’
nakeeran
கைதாகி மதுரை கோர்ட்டுக்கு வந்திருந்த வக்கிர வாத்தியார்கள் இருவருக்கு  அரணாக நின்று,  பத்திரிகை புகைப்படக் காரர்களிடம் சீறிய மற்ற ஆதரவு’ ஆசிரியர்களை அடி பின்னி எடுத்துவிட்டார் கள் சில வழக்கறிஞர்கள். 

""சர்வதேச மகளிர் தினத்தை இன்னைக்கு உலகமே கொண்டாடிக்கிட்டிருக்கு. இவனுக என்னடான்னா... ஸ்கூல்ல வச்சு, கேர்ள் ஸ்டூடண்ட்ஸ்கிட்ட மோசமா நடந்திருக்கானுவ. அத்தனை பேரு படிக்கிற பள்ளிக்கூடத்துல தைரியமாத்தான தப்பு பண்ணுனானுவ? இப்ப மட்டும் எதுக்கு மூஞ்சிய மூடறானுவ?  இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களுக்கு  சப்போர்ட் பண்ணுற.. அவனுககூட வேலை பார்க்கிற மத்த  வாத்திமார சும்மா விடலாமா? அதான்.. கோர்ட்டுக்கு வர்ற அக்யூஸ்டு கூட நாலு சாத்து சாத்திட்டுப் போறான்.. நம்ம நாட்டுல கொள்ளப்பேரு இதே சோலியாத்தான் திரியு றானுவ. இந்த மாதிரி ஆளுங்கள போலீஸு என்னமா பொத்தி... பொத்தி கூட்டிக்கிட்டு வருது. எல்லாம் பணம் பண்ணுற வேலை...''’என்று உஷ்ணம் தணியாமல் விளாசினார்  வழக்கறிஞர் முத்துக்குமார்.


இதைக் காட்டிலும் ஆவேசம் கொண்டவர் களாக இருக்கிறார்கள் மதுரை மாவட்டம் - குலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். 

""அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு.. என்னைய விட இவனுக்குத்தான் நல்லாத்  தெரியும்''’என்று சத்தியமூர்த்தி ஹரியைக் கை காட்ட, அவனோ இன்னொரு மாணவனின் பெயரைக் குறிப்பிட்டான். இப்படியே ஒவ்வொருவரும் தயங்க... மீசை அரும்பிய அந்த மாணவன் “""நான் சொல்லுறேன் சார்...''’என்று நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தான். உடனே,  மற்ற மாணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பள்ளியில் தங்கள் கண்ணெதிரே நடந்து வரும் தவறுகளைப் பட்டியலிட்டார்கள். 

""எங்க ஸ்கூல்ல இங்கிலீஷுக்கு எடுக்கிற டெரன்ஸ் சாரும், கம்ம்யூட்டர் சொல்லிக் கொடுக்கிற  விஜயகுமார் சாரும் நல்லவங்க இல்ல. கிளாஸ் டயத்துலயும் செல்போன நோண்டிக்கிட்டே இருப்பாங்க. அதுல அசிங்கப் படமெல்லாம் பார்ப் பாங்க. எப்பவாச்சும் அவங்களுக்கு பின்னால இருந்து நாங் களும் எட்டிப் பார்ப்போம். அப்ப... "என்ன சார்... இதப் போயி பார்க்கிறீங்க'ன்னு கேட்டா... "படிக்குற வேலைய மட்டும் பாருடா'ன்னு கைய ஓங்குவாங்க. கம்ப்யூட்டர் ரூம்ல பாய்ஸ ரொம்ப நேரம் உக்கார விடமாட்டாங்க. கேர்ள்ஸுன்னா எம்புட்டு நேரம்னாலும் இருக்கலாம். சொல்லித் தர்ற சாக்குல கேர்ள்ஸ உரசிக்கிட்டே இருப்பாங்க.. குப்பையே இல்லைன்னாலும் குனிஞ்சு கூட்டிப் பெருக்கச் சொல்லுவாங்க. அப்ப தப்பா பார்ப் பாங்க. தேவையில்லாம கேர்ள்ஸ தொட்டுத் தொட்டுப் பேசுவாங்க. பாய்ஸுன்னா எரிஞ்சு விழுவாங்க. பாடம் நடத்துறது புரியாம, பசங்கள்ல யாராச்சும் உம்முன்னு இருந்தா... "என்னடா, உன் பொண்டாட்டி யாரு கூடயாச்சும் ஓடிப் போயிட்டாளா? அதான் இம்புட்டு கவலையா இருக்கிறியா'ன்னு கேலி பேசி கேர்ள்ஸ சிரிக்க வைப்பாங்க. அப்பப்ப... டபுள் மீனிங்ல பேசி.. கேர்ள்ஸுல யார், யாரு அத ரசிக்கிறாங்கன்னு நோட்டம் விடுவாங்க. அப்புறம் சமயம் பார்த்து  தனியா கம்ப்யூட்டர் ரூமுக்கு வரச் சொல்லுவாங்க.. 

போன திங்கக்கிழமை. சாப் பாட்டு நேரத்துல அனுசுயா, சௌம்யா, ஜோதிகான்னு  எட் டாப்பு ஏ செக்ஷன் ஸ்டூ டண்ட்ஸ் மூணு பேரும் தண்ணி பிடிக்கப் போனப்ப... இந்த ரெண்டு சாரும் கம்ப்யூட்டர் ரூமுக்கு கூப்பிட்டிருக் காங்க. கேர்ள்ஸ் ரெண்டு பேரு மட்டும் உள்ள போயிருக்காங்க. உடம்ப செக் பண்ணணும்னு அந்த ரெண்டு பேரையும் சுடிதார் டாப்ஸ தூக்கச் சொல்லி பார்த்திருக்காங்க. அப்புறம் தப்பான இடத்துல கை வச்சதும்...  அந்த ரெண்டு பேரும் அழுதுக்கிட்டே ஓடியாந்தாங்க. இத சமூக அறிவியல் டீச்சர் திலோத்தமா பார்த்துட்டு "எதுக்கு அழுது கூப்பாடு போடுறீங்க. வெளிய யாருகிட்டயும் சொல்லாதீங்க. அந்த ரெண்டு சாரையும் நான் சத்தம் போடுறே'ன்னு சொல்லிட்டு... கம்ப்யூட்டர் ரூமுக்கு போயி "உங்க மக வயசுப் புள்ளங்ககிட்ட இப்படியா நடக்கிறது'ன்னு திட்டவும் செஞ்சாங்க. இத அப்படியே மூடி மறைச்சிடலாம்னு நெனச்சாங்க. ஆனா அந்த கேர்ள்ஸ்ல ஒருத்தி, வீட்டுக்குப் போனதும்.. வாத்தியாரு பண் ணுன தப்ப சொல்லிட்டா. அப்புறம்தான் மாதர் சங்கம் புகார் பண்ணி, போலீஸ்காரங்க வந்து அந்த ரெண்டு வாத்தியாரையும் இழுத்துட்டு போனாங்க...''’என்று சொல்லி முடித்துவிட்டு ""இவங்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பாங்க சார்?''’என்றார்கள் ஆதங்கத்துடன். 


அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு அந்தப் பள்ளிக்கு விசாரணை நடத்த வந்திருந்தார் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி.  அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், அந்த இரண்டு ஆசிரியர்களாலும் தாங்கள் பட்டு வந்த கொடுமை களை எழுதிக் கொடுத்தார்கள் மாணவிகள். இது குறித்து நம்மிடம் பேசிய அமுதவல்லி ""தலைமை ஆசிரியர் எக்ஸாம் ட்யூட்டிக்கு போயிருந்த நேரத்துல இது  நடந்திருக்கு. தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த பாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தை களைப் பாதுகாத்திடும் சட்டம் 2012-ன் கீழ் அந்த ரெண்டு ஆசிரியர்களும் அரெஸ்ட் ஆகியிருக் காங்க.  ஆசிரியைகள் மூலம் மாணவிகளுக்கு  ‘குட்-டச்’, ‘பேட்-டச்’ குறித்து கவுன்சிலிங் கொடுப்பதற்கு கல்வித் துறை ஏற்பாடு செய்யாமல் இல்லை'' என்றார்.  

நாம் கிளம்பியபோது மறித்த அந்த ஊர்க்காரர் ஒருவர் ""சரியா படிக்கலைன்னு பசங்கள கண்டிச் சிருக்காங்க. உடனே அந்த வாத்தியாருங்க மேல இல்லா தது பொல்லாதத சொல்லி கேஸுல சிக்க வச்சுட்டாங்க. அம்மா ஆட்சியில தப்பு நடக்குமா? நடக்கத்தான் விட்ருவமா?''’  என்று வலிய வந்து சவால்விட... ‘""ஆமா, நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க லாமா?''’என்றோம். ""என் பேரு முத்துராமலிங்கம். அம்மா பேரவை செயலாளராக்கும்...''’என்று நெஞ்சை நிமிர்த்தி அவர் சொன்னபோது, தவறான ஆசிரியர்கள்  கோர்ட்டில் அடி வாங்கிய காட்சி ஏனோ  நம் நினைவுக்கு வந்தது. 

ஆசிரியர் எனும் முகமூடிக்குள் வசதியாக ஒளிந்துகொண்டு வக்கிரங்களை வெளிப்படுத்துவோரை  சமுதாயமும் சட்டமும் தோலுரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

ad

ad