புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013



          லங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்தின் கைகளை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இந்திய பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். ஒரு கொடூரமான வரலாற்றுத் துயரம் பற்றி எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்க மறுக்கிறார்கள் அல்லது அந்தக் கேள்வியே தங்கள் காதில் விழாததுபோல நாடகமாடுகிறார்கள்.

இந்தியாவில் இலங்கைத் தமிழர் கள் பிரச்சினை தொடர்பாக ஒரு முக்கியமான மாற்றம் கடந்த சில தினங்களில் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தைத் தாண்டி முதன்முறை யாக தேசிய அளவில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த விவாதங்கள் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத் தில் தி.மு.க., அ.தி.மு.க மட்டுமல்ல இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இலங்கையின் போர்க்குற் றங்கள் குறித்து கடுமையாகக் குற்றம் சாட்டின. பாலச்சந்திரனின் புகைப் படம் திறக்காத கண்களையும் திறக்க வைத்துவிட்டன. துடிக்காத இதயங் களையும் துடிக்க வைத்துவிட்டன. 

பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா ""இலங்கையில் இனப்படு கொலை நடந்துகொண்டிருந்த போது இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்தியக் கட்சிகளும் கூட கண்டுகொள்ள வில்லை. புலிகளின் கடற்படையை இந்தியக் கடற்படை ஒழித்தது மட்டுமல்ல, இனப்படுகொலைக்கு இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்தது''’ என்று குற்றம் சாட்டினார்.

சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங் யாதவ், ""மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்‘ என்பதுதான் ஜவஹர்லால் நேருவின் கொள்கை. இந்தியா இந்தக் கொள்கையை பின்பற்றாததன் விளைவு தான் தமிழர்களுக்கு இந்தக் கொடுமைகள் நிகழக் காரணம். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை குழப்பமானதாக இருக்கிறது. சோனியாஜி, ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்களுக்கு உதவ என்ன நடவடிக்கை எடுத் தீர்கள் என்று உங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பிரத மரையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் கேளுங்கள்... அண்டை நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் என்பதற்காக நமது சொந்த மக்களின் உயிரும் உடமைகளும் சம்பந்தப் பட்ட விஷயத்தில் நாம் தலையிடாமல் இருக்க முடி யாது''’என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலுபிரசாத் ""இலங்கைத் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. கண்டிப்பாக இந்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும்''“ என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தாராசிங், ""இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு''’என்று வலியுறுத்தினார். 

இந்தக் குரல்கள் ஏன் 2009-ல் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட போது எழவில்லை என்ற கேள்வியை நாம் கேட்காமல் இருக்க முடியாது. உலகமே பார்த்துக்கொண்டிருக்க அந்த இனப்படுகொலை நிகழ்த்தப் பட்டது. வட இந்திய ஊடகங்களும் தேசிய ஆங்கில நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் முற்றாக இந்தப் படு கொலையை மூடி மறைத்தது மட்டு மல்ல, ஹிந்து நாளிதழ் உட்பட பல்வேறு தேசிய ஊடகங்கள் ராஜ பக்சேவுக்கு ஆதரவான ஒரு கருத்தியலை இந்திய அளவில் உருவாக்கின. பாராளுமன்றத்தில் இப்போது ஒலிக்கிற அளவில்கூட அந்தப் பிரச்சினை அப்போது ஒலிக்கப்படவில்லை. தமிழக மக்கள் இந்தப் படுகொலையை எதிர்த்து பெரிய அளவில் வீதிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைக்க வேண் டிய இடத்தில் இருந்த பெரிய கட்சிகள் அந்தக் கடமையை செய்யத் தவறின. 


இன்று தமிழக அரசியல் கட்சி களும் இந்தியாவிலுள்ள பிற எதிர்க்கட்சிகளும் இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் காங்கிரஸ் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அழுத்தமான மௌனம் சாதித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""இலங்கைத் தமிழர்களின் நிலை மீது மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல் தீர்வுதான் ஒரே வழி. இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு சமஉரிமை, சுயமதிப்பு, மரியாதை கிடைப்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத் தும்''’என்று பழைய பல்லவியையே பாடியிருக்கிறார். கடந்த பல வருடங்களாக இந்த வாசகங்களை எந்த மாற்றமும் இல்லாமல் இந்திய பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் கிளிப்பிள்ளையைப் போல சொல்லி வருகிறார்கள். இந்த வாசகங்களுக்கு எந்த அர்த்தமும் கிடையாது. இதற்காக இந்தியா ஒரு துரும்பைக்கூட அசைத்ததில்லை. ராஜபக்சே யுத்தத்தின்போதும் யுத்தத்திற்குப் பிறகும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செய்துவரும் கொடுமைகள் எதையும் இந்த வாசகங்கள் ஊசி முனை அளவிலேனும் தடுத்து நிறுத்தவில்லை என்பதை உலகம் அறியும். பிறகு யாரை ஏமாற்ற இந்தியப் பிரதமர் இந்த நாடகத்தை ஆடி வருகிறார்? மேலும் பிரதமரின் உரையில் ஐ.நா. மனித உரிமை மன்ற கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்தோ, பாலச்சந்திரனின் புகைப்படம் சொல்லும் போர்க்குற்ற சாட்சியம் குறித்தோ எந்த பதிலும் இல்லை. 

பிரதமர் சொல்லத் தவறியதை வெளி யுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெளிவாகவே சொல்கிறார். ""மற்றவர்களின் பிரச்சினையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராகச் செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவ காரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவை யில்லை. சர்வதேச அளவில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் வகையில் செயல்படுவதை இந்தியா எப்போதும் ஏற்றுக் கொண்டது இல்லை''’என்றார்.

சல்மான் குர்ஷித்திற்கு மனித உரிமைகளைப் பற்றி மட்டு மல்ல, வரலாறு குறித்தும் எதுவும் தெரியாது என்பதைத்தான் இந்தப் பேச்சு காட்டுகிறது. இந்தியா தனது ராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை பாகிஸ்தானில் இருந்து 1971-ல் பிரித்தபோது இந்திய அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா? "கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வங்காளிகள்'’என்பதுதான். இந்த நியதிகள் எதுவும் தமிழ் வம்சா வழியைச் சேர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பொருந்தாதா? 

1971. இலங்கையில் ஜே.வி.பி. கலகத்தின் போது அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே ஜே.வி.பி.யினால் சிறை வைக்கப் பட்டார். அப்போது இந்திய விமானப்படையை அனுப்பினார் இந்திரா காந்தி. இந்தியப் படைகள் கலகக்காரர்களோடு சண்டையிட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவை காப்பாற்றிய துடன் ஜே.வி.பி. போராட்டத்தை ஒடுக்குவதில் இலங்கைக்குப் பெரும் உதவி புரிந்தன. 

1987-ல் இந்திய விமானப் படைகள் இலங்கைத் தமிழர் பிரதேசங்களில் அத்துமீறி பறந்து உணவுப் பொட்டலங்களை வீசின. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி இந்திய அமைதிப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அங்கு சமாதானத்தை நிலை நாட்டுகிறோம் என்ற பெயரில் இலங்கைத் தமிழர்கள் மேல் இந்திய ராணுவம் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. 

இந்திரா காந்தி இலங்கை அரசாங்கத்தின் மீது கட்டுப்பாடு செலுத்த வேண்டும் என்பதற்காகவே ஈழப்போராட்ட குழுக்களுக்கு இந்தியாவில் அடைக்கலமும் பயிற்சியும் அளித்தார் என்பது ஊரறிந்த உண்மை.

இவ்வாறு இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது என்கிற ஆத்திரம் நீண்ட காலமாக சிங்கள இனவாத அரசியல் கட்சிகளுக்கு உண்டு. அந்த வெறுப்பின் அடிப்படையில்தான் ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்கள ராணுவ வீரர் ஒருவரால் தாக்கப்பட்டார். 

இறுதி யுத்தத்தின்போது புலிகளைத் தோற்கடிக்க இந்தியா ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது. புலிகளின் விமானப்படையை நசுக்கு வதற்காக அதிநவீன ரேடார் இயந் திரங்களையும் அவற்றை இயக்கு வதற்குப் பயிற்சி அளிக்க அதிகாரி களையும் இந்திய அரசாங்கம் இலங் கைக்கு அனுப்பியது. யுத்த முனையில் இரண்டு இந்திய அதிகாரிகள் காயம் பட்டதாக அப்போதே செய்திகள் வெளிவந்தன. மேலும் புலிகளுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாது என்பதற்காக இலங்கைக் கடற்படை யுடன் இந்திய கடற்படை கூட்டாகச் செயல்பட்டதை யாரும் மறைக்க முடியாது.

இவ்வாறு தன்னுடைய அண்டை நாடுகள் விவகாரத்தில் -குறிப்பாக இலங்கையில் தனது அரசியல் நலன்களுக்காக திட்டவட்டமான ராணுவத் தலையீடுகளை இந்தியா தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. "அண்டை நாடுகள் விவகாரத்தில் தலையிடமாட்டோம்'   என்று சல்மான் குர்ஷித் இப்போது சொல்வது பச்சைப் பொய் மட்டுமல்ல, இலங்கை தமிழர்களைக் கைவிடுவதற்கான ஒரு குரூரமான தந்திரம். 

இந்தியா தனது படு கேவலமான அயலுறவுக் கொள்கையால் சர்வதேச அரங்கில் மிகவும் கீழான நிலைக்கு சென்றுவிட்டது. இந்தியா ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறும். ஆனால் இந்தியா தனது ரத்தக்கறையை கழுவிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல.

ad

ad