-
19 ஜன., 2014
18 ஜன., 2014
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி
மும்பை தாவூதி போரா ஆன்மிகத்தலைவர் சித்னா மொகம்மத் பஹ்ருதீன் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மலபார் ஹில்ஸ் ரெஸிடன்ஸ் பகுதியில் நடைபெற்றது. சஃபி மஹால் பகுதியில் இன்று அதிகாலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் நெருக்கித் தள்ளியில் 18 பேர் பலியாகினர். காயமடைந்த 47 பேர் மும்பையில் உள்ள 4 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவர் உட்பட 6 பேர் கைது
இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த சித்தா மருத்துவர் செல்வராஜ் (வயது 42), என்பவரின் கிளினிக்கில், குல்லூர் சந்தையில் உள்
போர்க்குற்ற ஆதாரங்கள் முற்றிலும் உண்மையே; முடியுமானால் அவற்றைப் பொய் என்று நிரூபியுங்கள் சிங்களக் கடும்போக்கு அமைப்புகளுக்கு மன்னார் ஆயர் சவால்

அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
வலி.கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரின் கட்சி உறுப்புரிமை ரத்து
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் 7 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் கடந்த இரண்டு தடவைகளாக பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் எதிராக வாக்களித்திருந்தனர்.
வலுவான நிலையில் இலங்கை அணி
இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தை நேற்று 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தொடர்ந்தது. அணித் தலைவர் மெத்திவ்சுடன் இணைந்து ஆடிய விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன 35 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.
2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக மரியான்பட பாடல்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)