புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

2013 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக மரியான்பட பாடல்களை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழின் மிகச் சிறந்த ஆல்பமாக மரியான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தாண்டு நடந்த சிறந்தவைகள் மற்றும், மறக்க இயலாத முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவது வழக்கமே. அந்தவகையில் பிரபல நிறுவனமான ஆப்பிள் தனது 2013ம் ஆண்டு தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழின் மிகச் சிறந்த ஆல்பமாக மரியான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2013ல் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மரியான். இத்திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக பார்வதி மேனன் நடித்திருந்தார். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சூடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில் காதலையும் கலந்து பரிமாறியிருந்தார்கள். தற்போது 2013ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக இப்படத்தை தேர்வு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
இது குறித்து தகவலறிந்த இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், ‘2013ம் ஆண்டின் தமிழின் சிறந்த ஆல்பமாக மரியானை தேர்வு செய்ததற்கும், அதற்கு காரணமான இப்படத்தின் பாடல்களை ரசித்துக் கேட்ட ரசிகர்களுக்கும் நன்றி' என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

ad

ad