உயிருக்கு போராடும் மைக்கல் ஷ¥மாக்கர் கோமாவில் இருந்து மீள வாய்ப்பு குறைவு
அங்கு தனது மகனுடன் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது சறுக்கி விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.
உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக கிரெநோபில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு இரண்டு முறை தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோதும் அவரது மூளையில் ஏற்பட்ட அழுத்ததைக் குறைத்து விரைவில் குணமடைய வேண்டி மருத்துவமுறையில் கோமா நிலையில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக இதுபோல் கோமா நிலையில் வைக்கப்படுபவர்கள் 14 நாட்களுக்குள் அதிலிருந்து வெளிக் கொண்டு வரப்படுவர். ஆனால் ஷ¥மாக்கர் கடந்த 18 நாட்களாக கோமா நிலையிலேயே உள்ளார். எனவே இவர் இதிலிருந்து மீண்டு வரமுடியாமலேயே போய்விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், மருத்துவர்கள் அவரை உடனடியாக கோமாவிலிருந்து எழுப்பும் எண்ணத்திலும் இல்லை என்றும் ஜேர்மன் நாட்டின் பத்திரிகை வெளியீடு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த வாரமும் அவருக்கு ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் நீண்ட நாள் கோமாவில் ஆழ்ந்திருப்பது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.