புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

கடும் வெப்பத்துக்கு மத்தியில் ஆஸி. ஓபன் 3 ஆவது சுற்றுக்குள் முன்னணி வீரர்கள்

அவுஸ்­தி­ரே­லிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3 ஆவது சுற்­றுக்குள் முன்­னணி வீர, வீராங்­க­னைகளான ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நடப்பு சம்பியன் அஷரென்கா, செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா
ஆகியோர் நுழைந்­துள்­ளனர்.

ஆண்டின் முத­லா­வது கிரா ண்ட்ஸ்லாம் போட்­டி­யான அவுஸ்­தி­ரே­லிய ஓபன் டென்னிஸ் தொடர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்­றது. இதில் தற்­போது அங்கு நிலவும் 40 டிகிரி செல்­சி­யஸைத் தாண்­டிய வெப்­ப­நிலை வீரர்­க­ளுக்கும் ரசி­கர்­க­ளுக்கும் கடும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
இதனால் கிராண்ட் ஸ்லாம் போட்டி அமைப்­பா­ளர்கள் தீவிர வெப்ப கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள ­தாக நேற்று அறி­வித்­துள்­ளனர். அதன்­படி நேற்று திறந்­த­வெளி மைதா­னத்தில் ஆடப்­பட்­ட போட்­டிகள் சிலமணி நேரம் நிறுத்­தப்­பட்டன. ரோட் லவர், ஹிசென்ஸ் அரங்­க ங்களின் மேற்­புற கூரை மூடப்­பட்டு அதன்பின் அங்கு ஆட்­டங்கள் தொட­ரப்­படும் என்றும் அவர்கள் குறி ப்­பிட்­டுள்­ளனர்.
ஏனைய திறந்தவெளி ஆடு­க­ளங்­களில் ஆடு­வ­தற்­கு­ரிய வெப்­ப­நிலை காணப்­பட்ட பின்­னரே அங்கு மீண்டும் போட்­டிகள் நடத்­தப்­ப டும் என்றும் அவர்­க­ளது இணை­ய­தளம் செய்தி வெளியிட்டுள்­ளது.

ad

ad