புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014


காங்கிரஸின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தி

சோனியா காந்தி அறிவிப்பு-பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே சோனியா காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரசின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக மட்டுமே இருப்பார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார். இந்த முடிவு இறுதியா னது என்றும் சோனியா காந்தி தெரி வித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாக உள்ளது. இந்தத் தேர்தல் முரண்பட்ட கொள்கைகளுக்கு இடையிலான போர். அந்தப் போரைச் சந்திக்க நாங்கள் தயார்.
ராகுல் காந்தி குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு இறுதியானது மக்களை மதத்தின் பெயரால் பா.ஜ.க பிளவுபடுத்துகிறது. மதவாதம்தான் இன்று நாட்டின் மிகப் பெரிய சவாலாக உள்ளது. மதத்தை வன்முறைக்கு பா.ஜ.க. பயன்படுத்துகிறது. மக்களை பிளவுபடுத்த பா.ஜ.க. முயலுகிறது. இதை முறியடிப்போம். நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்தாலும், வேறுபாடுகளும் அதிக அளவில் பெருகிக் கொண்டே போகிறது. இதைச் சரி செய்ய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு முயற்சிகளை எடுத்தவண்ணம் உள்ளது என்றும் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் செயக்குழுக் கூட்டத்தில் பலரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். ஆனால் அதை சோனியா காந்தி நிராகரித்து விட்டார். அப்படி அறிவிப்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திலேயே கிடையாது.
எனவே அப்படிச் செய்ய முடியாது என்று அவர் கூறி விட்டதாகவும். இதையடுத்தே காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவராக ராகுலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad