வலுவான நிலையில் இலங்கை அணி
இலங்கை அணி 2வது நாள் ஆட்டத்தை நேற்று 5 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தொடர்ந்தது. அணித் தலைவர் மெத்திவ்சுடன் இணைந்து ஆடிய விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தன 35 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார்.
அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 236. பின்னர் அணித் தலைவர் மெத்திவ்ஸ¤டன் ஜோடி சேர்ந்த டில் ருவன் பெரேரா இருவரும் சிறப்பாகவும் நிதானமாகவும் ஆடிக் கொண்டிருந்த போது அணித் தலைவர் மெத்திவ்ஸ் 91 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 351. டில்ருவன் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த ஹேரத் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் டில்ருவன் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த சமிந்த எரங்க இருவரும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
இலங்கை அணி செய்தி அச்சுக்குப் போகும் வரை 360 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜுனைத் கான், 2 விக்கெட்டையும், தங்க ஒரு விக்கெட்டையும் நேற்று கைப்பற்றினர். டில்ருவன் பெரேரா ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும், எரங்க ஆட்டமிழக்காமல் 2 ஓட்டங்களையும் பெற்று ஆடுகின்றனர்.
இன்று போட்டியின் 3ம் நாளாகும்.