மருத்துவமனையில் பிரான்ஸ் அதிபர் மனைவி; தற்கொலை முயற்சி?
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, ஜூலி காயட் (41 வயது) என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி, அதிபரின் மனைவி வலேரி டிரைர்வைலர் அதிகமான மாத்திரைகளை உட்கொண்டார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பால் அதிபர் ஹாலண்டே, தனது மனைவிக்கு பிரிவு ஒப்பந்தத்தை அனுப்பினார்.
அதற்குள் வலேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. நடிகை ஜூலி காய்ட்டுடன் தான் அதிபராக வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக தொடர்பு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள ஹாலண்டே, மேலும் அது பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனைவியைக் காண அதிபர் இதுவரை செல்லவில்லை. எனினும், பூங்கொத்துக்களை அனுப்பினார்.