புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2014


சென்னை அடுக்குமாடி விபத்து :ஜெயலலிதா அவசர உத்தரவு
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி புதிய கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.  

இந்த இடிபாடுகளூக்கு இடையில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.  ஒருவர் பலியாகியுள்ளார்.  கட்டிடத்தில் மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், இணைய ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் நேரில் பார்வையிட்டார்.


இந்த விபத்து குறித்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா,  ‘’இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப்படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.  இரவு நேர மீட்புப்பணிகளை மேற்கொள்ள மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  தேவையான உபகரணங்களுடன் தொழில்நுட்ப பணியாளர்கள் அனுப்பப்பட் டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.  
அவர் மேலும்,  ‘விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்

ad

ad