புதன், பிப்ரவரி 22, 2017

வித்தியா கொலை வழக்கில் சந்தேகநபர் அரசதரப்பு சாட்சியாளராகிறார்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார்.

வழக்கின் 11 ஆம் இலக்க சந்தேகநபரே அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று (22) அறிவித்துள்ளார்.

அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக வழங்க ப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொட ர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.