புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2017

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்

கேப்பாபுலவு மற்றும் வலிவடக்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய  உழைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்   இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் கவனயீர்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இப் போராட்டத்தில் கோப்பாபுலவு மக்களின் நிலங்கள் எந்த நிபந்தனைகளும் தமாதமும் இன்றி விடுவிக்கப்படவேண்டும், வலி வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன, அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது, இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு, நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல் ஆகிய கோசங்களை முன்வைத்து கவனயீர்பு போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டதில் பல்வேறு  அமைப்புகள் மற்றும் பெருமளவான சிங்கள மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் யாழ் மாவட்ட செயலகத்தில்   படையினரால் வடக்கு மக்களுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களை அக ற்றுவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த மகஜர்  யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதியிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு  மக்களின் உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இலங்கையின்  பல பகுதிகளிலும் இருந்து இன, மத, மொழி பேதங்களை கடந்து யாழ்ப்பாணத்தில் இன்று ஒன்றுதிரண்ட பல்வேறு அமைப்பினர், யாழ்.பேரூந்து நிலையத்தின் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு பேரணியாக சென்று இம் மகஜரை கையளித்துள்ளனர்.

மேலும் முகாம்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கு மாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


ad

ad