புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம


இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம்
சாட்டப்பட்டவர்கள் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் தமிழர்கள் இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு லட்சக்கணக்கான தமிழர்கள் தற்போது வசித்து வருகிறார்கள்.
இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டு சிறப்பு முகாமில், 48 பேரும், பூந்தமல்லி சிறப்பு முகாமில் 4 பேரும் கடந்த பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லி முகாமில் உள்ள அகதி சந்திரகுமார் தன்னையும், தன்னுடன் இருக்கும் மற்ற கைதிகளான கங்காதரன், ஜெயமோகன், பகீரதன் ஆகியோரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 27-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெயநந்தினி, மகன்கள் பரிதி அழகன் (வயது 6), பிருந்தாவன் (3) ஆகியோருடன் சந்திரகுமாரை பார்ப்பதற்காக சென்றார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் மனமுடைந்த சந்திரகுமார் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து கடந்த 1-ந்தேதி அன்று முகாமுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.
27-ந்தேதியில் இருந்து இன்றுவரை 9 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் போர் நடந்தபோது காயங்களுடன் குடும்பத்துடன் நான் தமிழகத்துக்கு தப்பி வந்தேன். இந்த சமயத்தில்தான் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
3.5 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் நான் வாடி வருகிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு முடிந்த பின்னரும் தனிமைச் சிறையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன். அயல் நாட்டவர் சட்டப்படி வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குடும்பத்தினருடனேயே அவர்கள் தங்கியிருந்து வழக்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பு எனக்கும், என்னைப்போல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்ப ர்களுக்கும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. எனவே என்னைப் போன்ற அனைவரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் சிறையில் நாங்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஈழ விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

ad

ad