புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


கடற்புலிகள் பயன்படுத்திய தாக்குதல் படகை பார்வையிட்ட சீன அமைச்சருக்கு ஆச்சரியமாம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் பாதுகாப்பு நிலைகளை பார்வையிட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் அமைந்துள்ள டொக்யார்ட்டுக்கு சென்ற இந்தக் குழுவினர், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
படகு மூலம் இவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், அங்குள்ள சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சென்றனர். கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்த சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வியப்புத் தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் படகுகள் வடிவமைப்பு மற்றும் அவர்கள் கையாண்ட தாக்குதல் உத்திகள் குறித்தும் சீனப் பாதுகாப்பு அமைச்சர், சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதியிடம் கேட்டறிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad