புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013

ஜெனிவாக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த உதயன் மீதே தாக்கு; ஐ.தே.க. கடும் கண்டனம்
"உதயன்' பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. 


ஊடக அடக்குமுறைகள் தொடர்கின்றன என்ற ஜெனிவாக் குற்றச்சாட்டை  உறுதிப்படுத்தியுள்ளன. மிலேச்சத்தனமான இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் தாக்குதலின் பின்னணியில் இருந்து செயல்படும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் கொரடாவுமான அஜித்.பி.பெரேரா இதனைத் தெரிவித்தார்.

நேற்று கொழும்பு சி.எப்.பி.எஸ். மத்திய நிலையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
நேற்றுக் காலை கிளிநொச்சியில் உள்ள "உதயன்' அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனநாய ரீதியாக முகம் கொடுக்கமுடியாத கோழைகளே இப்படியான தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

உதயன் நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டிருப்பது முதலாவது தடவை அல்ல.
இறுதிப்போர் முடிவடைந்த பின்னர் தொடர்ச்சியாகப் பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

"உதயன்' செய்தி ஆசிரியர் குகநாதன் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாகப் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். வாகனங்களும் பத்திரிகைகளும் தீக்கரையாக்கப்பட்டன.

ஆனால் இன்றுவரை இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை. நேற்று அதிகாலை கிளிநொச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பலர் காயமடைந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அலுவலகத்தின் உடைமைகள் அடித்து நொருக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளன.

தாக்குதலை நடத்திய குண்டர்கள் சர்வசாதாரணமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கிளிநொச்சி இராணுவத்தின் கேந்திர நிலையம். இரவு பகலாக இராணுவ, பொலிஸ்  சேவைகள் இடம்பெறுகின்றன. இப்படியாக சூழ்நிலையில் இந்தத் தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிச் செல்லும் இனந்தெரியாத நபர்கள் யார்?

எங்கிருந்து வருகின்றனர் இவர்கள் ஏன் கைதுசெய்யப்படுவதில்லை. என்ற கேள்வி எழுகின்றது. வடக்கு கிழக்கு உட்பட்ட சகல பகுதிகளும் உள்ள ஊடகவியாலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இவ்வாறான செயல்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. என்ற  குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
இந்த விடயத்தில் அரசு தொடர்ந்தும் மௌன காக்குமேயானால் அது சர்வதேச சமூகத்தின் நேரடி நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட வேண்டும்.

அதேவேளை இதே நிலைமை தொடர்ந்தால் நாமும் அமைதியாக இருக்க முடியாது
 அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பின் விளைவுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றுள்ளது.

ad

ad