புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2013


பாமக 31 தொகுதிகளில் போட்டிடுமாம் – 13 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் ராமதாஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாமக 31 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் பாமக செயல்வீரர்கள் கூட்டம், விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது: அதிமுக, திமுகவுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி வைக்காது. பாமக தலைமையில் ஒரு மாற்று அணி உருவாகும். பாமக 31 தொகுதிகளில் போட்டியிடும். இதில் 13 தொகுதிகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளை வீழ்த்துவதற்கு பாமக தலைமையில் அணி அமைவது காலத்தின் கட்டாயம்.
ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னேற்றத்தில் பாமகவுக்கு அதிக அக்கறை உண்டு. ஆனால் சிலர் நாங்கள் பல ஆண்டுகளாக அடிமைப்பட்டு இருந்து விட்டோம். இப்போது நீங்கள் அடிமைப்பட்டு இருங்கள் என்று திருப்பிச் சொல்வது எப்படி நியாயம்? சரி நாங்கள் அப்படிக் கூட இருக்கிறோம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம் என்றால், முடியாது உங்கள் பெண்ணை கொடுங்கள் என்கின்றனர். இதனால் இரு சமூகங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் கெடுகிறது. நான் செல்லும் இடங்களில் எனக்கு சிலர் கருப்புக் கொடி காட்டுகின்றனர். நாங்கள் காட்ட ஆரம்பித்தால் அவர்கள் தாங்குவார்களா?. நன்றாக படிப்பை முடித்துவிட்டு, நல்ல வேலைக்கு சென்றுவிட்டு காதலிக்கட்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றார் ராமதாஸ்.

ad

ad