புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

ஆருஷி வழக்கு: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை அளித்து காசியாபாத் கோர்ட் தீர்ப்பு
 
இளம்பெண் ஆருஷி மற்றும் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லி அருகில் உள்ள நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார், இவரது மனைவி நுபர் தல்வார். இவர்களது மகள் ஆருஷி (14). 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2008ம் ஆண்டு, மே மாதம், 15ம் தேதி, வீட்டின் ஒரு அறையில் ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாடியில், வீட்டு வேலைக்காரராக இருந்த ஹேம்ராஜ் என்பவரும் கொலை செய்ப்பட்ட நிலையில் இருந்தார். 
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரனையில் துப்புகிடைக்காமல் தொய்வு ஏற்பட்ட நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்து விசாரித்து வந்தது. முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி அருண்குமார் உட்பட 14 சாட்சிகளை விசாரிக்க ராஜேஸ் மற்றும் நுபுர் தல்வார் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடந்த சி.பி.ஐ விசாரணையில்  ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொன்றது, ஆருஷியின் பெற்றோர்தான் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.

ஐந்தரை ஆண்டுகளாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி  எஸ்.லால் இருவரையும் குற்றவாளிகள் என்று 25.11.2013 திங்கள்கிழமை அறிவித்தார். செவ்வாய்க்கிழமை தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை நீதிபதி எஸ்.லால் தண்டனை விபரத்தை அறிவித்தார். அதில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ் தல்வார்- நுபுல் தல்வார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்..

ad

ad