புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

விடுதலைப் பேரழகு 


ஈழவேட்கையின் தீரா ஊற்றாகி,
காலவேள்வியில் சூறாவளியாகி,


உச்சரிக்கும் போதெல்லாம்
உணர்வுகள் ஒளிகொள்ளும்
ஒற்றைச் சொல்லாகி 
எமையாளும் பெருந்தகையே!

வாழ்;த்துகின்றறோம்!

முன்னவனே!
மூபத்து ஆண்டுகளுக்குள்
மூத்தகுடி அவலத்தை
உலகறியச் செய்தவனே!

போற்றுகின்றோம்!

உணர்வுகளின்
அடிமைத் தோலுரித்து
ஐநூறு ஆண்டு கடந்து
விடுதலைப் பேரழகைத்
தரிசிக்கச் செய்த தலைவா!

நீயெம்
வரலாற்றுப் பேரெழில்.

உலகம் 
புரிந்து கொள்ள முடியாத புத்தகம்.

அற்புத மேய்ப்பனே!

இரு பகல்களின்
இடையிட்ட இரவு இது.

எம் தூரத்து நட்சத்திரங்களைக் கூட
கயவர் களவாடி விட்ட காலம். 

‘ஒளி தரவெனச் சூரியன் இனி வரான்’ 
என்பதாய்ச் சூழ்ச்சிகள் சூத்திரம்
கூறுகின்றன.

கூண்டுக்கிளிகளின்
தந்திரச் சாத்திரங்களில்
சிக்கிக் கிடக்கின்றன
சின்னச் சிந்தனைகள்.

உன்னருவைப் பச்சை குத்தி
பவ்வியமாய் வலம் வருகின்றன
சில பச்சோந்திகள்.

கார்த்திகை 27இல்
நெய்விளக்கேற்றி
நெஞ்சுருகிப் பின்
உன்னுரை கேட்ட
உலகம் உயிர்திருக்குமே.

கடந்த தடங்களை அறிவாக்கி
கடக்கும் கணங்களை நேர்த்தியாக்கி
வரும்காலத்தை நெறியாக்கி
வழிகாட்டிய 
உங்கள் உரைக்கு நிகர்
உலகிலேது?

வெற்றுவெளி கண்டு
இடையிட்டு எழுந்த
சில ஒலிகள்
பிரபாகரத்தின்
‘பிரதிகள்’ ஆக முயல்கின்றன.

உன் வெள்ளாட்டு மந்தைக்குள்
உருமாறி உலா வந்த
கருப்பாடுகள் சாயம் வெளிறிச்
சாத்தான்களாகித் திரிகின்றன. 

உயிரைச் சுற்றிக்கிடக்கும்
ஒற்றைச்சொல் மந்திரமே!

முள்ளிமுனை முற்றுப்புள்ளியல்லவென,
உன் பெயர் ஓதி உயிர்த்திருக்கும்
பிள்ளைகள் அறிவர்.

தோலுக்கு வரி பூசி போலிக்குப் புலியாகி
கூலிக்கு மாரடிக்கும் கூனர் கும்பல்
கூடி முயன்றாலும்,

உன் விழியேறிய தழல்
ஒருபோதும் அணையாது. 

பிறந்தோர் உருவிலும்
பிறப்போர் கருவிலும்
இணைந்தே இருக்கும். 

விடுதலைத் தீ.

ad

ad