புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2013

இனப்படுகொலையில் ராஜபக்ச 100 வீத பொறுப்பு என்றால் மன்மோகனுக்கு 50 வீத தார்மீக பொறுப்புண்டு!- இல.கணேசன்
இலங்கை அரசுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பா.ஜனதாதான் காரணம் என இந்திய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு அந்த கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் பஞ்சாயத்தில் கிராம யாத்திரையை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன்,
பா.ஜனதா மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.
அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜனதா உணர்ந்து இருந்தது.
எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது தர மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு தர மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாடு வெறும் நாடகம். இதனால் பயன்பெற போவது ராஜபக்ஷ. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் கொமன்வெல்த் மாநாட்டை எதிர்த்தது பா.ஜனதா.
இங்கிலாந்து பிரதமர் கேமரூனின் அடிப்படை தைரியம் கூட மன்மோகன் சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்த பிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்ச 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு.
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும். காலம் கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

ad

ad