புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014


ஈராக்கில் ஓயாத அலைகள்-3: குர்திஸ் மக்களைப் போல தமிழர்களுக்கும் தனிநாடா? புதிரான உண்மைத் தகவல்
ஈராக் இன்றைய செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. இந்த நிலைமையால் எரிபொருளின் விலை உயர்வு உலகின் எல்லா நாடுகளையும் ஆட்டங்காண வைத்துள்ளது.
இது தொடர்பில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்கள் லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஈராக்கில் ஒரு ஒழுங்கான நிர்வாகத்தை ஏற்படுத்தி படைகளிற்கு பயிற்சியளித்து அவர்களின் கையிலே பாதுகாப்பை ஒப்படைத்து விட்டோம் என்று அமெரிக்கா கூறிய இரண்டு மூன்று வாராங்களிற்குள்ளேயே இந்த விபரீதக் கிளர்ச்சி தொடங்கி விட்டது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தத் போராட்டக் குழுவை பயங்கரவாதிகள் என்று அழைக்காமல் எக்ஸ்றீமிஸ்ற் அதாவது அதீத மிதவாதிகள் என்ற பெயரில் குறிப்பிட்டிருகிறார்.
இப்போது போர் புரியும் தீவிரவாதக் குழுவின் ஈராக்கையும், சிரியாவையும் இஸ்லாமிய தேசங்களாக மாற்றுவது என்ற கொள்கைக்கான சாத்தியப்படுமா என்பதைக் கணிக்க 300 பேரடங்கிய சிறப்புக் குழுவொன்றை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
10 ஆயிரம் கிளர்ச்சியாளர்களே கொண்ட படையணி நிலத்தை தக்கவைத்தல் என்பதில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றாலே அவர்கள் விரும்புவது சாத்தியம். போராட்ட நோக்கங்கள், களங்கள் வேறாக இருந்தாலும் ஓயாத அலைகள்-3 நடவடிக்கையை இதற்கு ஒப்பிடலாம்.
ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் யாழ் நகரப் பகுதியில் கொழும்புத் துறை, அரியாலை என படகு அணிகள் மூலம் உட்சென்றன.
இலங்கைப் படைகளை காப்பாற்ற கப்பல்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்தியா உத்தியோக பூர்வமாக ஏற்பாடுகளைச் செய்தது.
கால அவகாசத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்றது. அதற்குள் ஆட்பற்றாக்குறை காரணமாக நிலத்தை தக்கவைத்தல் நிலைமை மாறிவிட்டது.
ஈராக்கிய தேசத்தின் மூன்று இனப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாத செயற்பாட்டை உடையன என்ற என்ற காரணத்தால் சில வேளைகளில் ஈராக்கிய தேசம் இரண்டு அல்லது மூன்றாகப் பிரியலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad