புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014


டக்ளஸ் மீதான கொலை வழக்கு குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கொலை வழக்கில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனு குறித்து பதிலளிக்க சென்னை சூளைமேடு காவல்துறை ஆய்வாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சிறுதொழில் துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986 ஆம் ஆண்டு சூளைமேடு பகுதியில் தங்கியிருந்தார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதற்கு டக்ளஸ் தேவானந்தாவும், அவரது இயக்கத்தை சேர்ந்த போராளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் மீது டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், திருநாவுக்கரசு என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அப்போது அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 1993 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக கூடுதல் நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை ரத்து செய்யவேண்டும் என்றும், தன்னை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மனுதாக்கல் செய்தார். இதற்கு காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, டக்ளஸ் தேவானந்தா மனுவை, நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை காலதாமதமாக தாக்கல் செய்ததற்கு அனுமதி கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி சூளைமேடு பொலிஸ் அதிகாரிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். 

ad

ad