புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014

அரசையும் இராணுவத்தினரையும் விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம்; ஜனாதிபதி நியமித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கருத்து 
இறுதிக் கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்த ஐ.நா. நிபுணர்
குழுவின் அறிக்கையில் (தருஸ்மன்) குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசிடமும், இராணுவத்தினரிடமும் விசாரணை நடத்த தாம் அனுமதி கோரியுள்ளோம் என்று இலங்கை ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவைச் சேர்ந்த சேர்ஜெப்றி நைஸ் தெரிவித்துள்ளார்.
 
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, போர்க் குற்றங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. 
 
இந்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த ஆலோசனைச் சபையின் தலைவராக சட்டத்தரணி டெஸ்மன் டீ சில்வாவும் உறுப்பினர்களாக, சட்டத்தரணி ஜெப்றி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
ஆணைக்குழு உறுப்பினர் ஜெப்றி நைஸ் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கிய நேர்காணலில்,
 
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தனக்கு ஆலோசனை வழங்க மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்திருந்தார். இந்தக் குழுவினர் போரின் போது 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இதில் இராணுவத்தினர் மற்றம் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தனர்.
 
இந்த நிபுணர் குழு அறிக்கையை  நாம் முழுமையாகப் படித்து வருகிறோம். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசிடமும், இராணுவத்தினரிடமும், போரில் ஈடுபட்ட ஏகைய தரப்புக்களிடமும் விசாரணை மேற்கொள்ள  வேண்டியுள்ளது. 
 
இதற்கான அனுமதியை இலங்கை அரசிடம் கோரியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

ad

ad