புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014


கொழும்பிலேயே அதிகளவில் ஏழைகள் இருக்கின்றார்கள்: அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் கொழும்பின் வடக்கு தொகுதியிலேயே உயர்கல்வியை பெற முடியாத பிள்ளைகள் அதிகளவில் இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர், அதேபோல் பெரும் எண்ணிக்கையில் வறிய மக்களும் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த காலம் முழுவதும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ஷவின் கொழும்பு நகர அலங்காரத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியாது என்று அமைச்சர் மறைமுகமாக கூறியுள்ளதன் மூலம் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிராக கடும் தாக்குதலை தொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ராஜபக்ஷ அரசின் கண்காட்சி அபிவிருத்தியை விமர்சித்து வரும் அரசின் கூட்டணிக் கட்சிகள் சில, ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்குமாறு பகிரங்கமாக விமர்சித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad