புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014


: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது தரப்பு இறுதிவாதம் இன்றுடன் நிறைவடைந்தது.

ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இறுதி வாதத்தை கடந்த 24 நாட்களாக வாதாடி வந்த நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தனது தரப்பு வாதத்தை இன்றுடன் (23ஆம் தேதி) முடிக்கப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி,   நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் 25 நாளாக செய்து வந்த தனது வாதத்தை இன்று நிறைவு செய்தார்.

ஜெயலலிதா மீது 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில், அக்குற்றச்சாட்டை மறுத்து குமார் 80 மணி நேரம் வாதாடி இருக்கிறார்.
அவர் தனது வாதத்தில், "விசாரணை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றள்ளது. புலன் விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்படாமல், அன்றைய ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. அதனால், இந்த வழக்கில் இருந்து எனது மனுதாரர்கள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ad

ad