புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014

காணிகளை மீட்டுத் தருமாறு உரிமையாளர்கள் முறைப்பாடு; நேற்று மனித உரிமை ஆணைக்குழுவில் பதிந்தனர் 
கீரிமலையில், உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியேயுள்ள தமது சொந்தக் காணிகளை துப்புரவு செய்ய முயன்ற
பொதுமக்களை, பொலிஸார் தடுத்து நிறுத்தினர் என்றும் தமது காணிகளை துப்புரவு செய்ய ஏற்பாடு செய்து தருமாறும் கோரி, காணி உரிமையாளர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.பிராந்தியக் கிளையில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
 
கீரிமலையில், நகுலேஸ்வரம் (ஜே/226) கிராம சேவையாளர் பிரிவில் 183 ஏக்கர் காணியை, கடற்படை முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி குறித்த காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் முயன்றனர். இதன்போது, பொது மக்கள் திரண்டு எதிர்த்ததால் அன்று அந்த முயற்சி கைவிடப்பட்டது. இருப்பினும் மக்களுக்கு தெரியாமல் அந்தக் காணிகள் அளவிடப்பட்டன. 
 
இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்கு வெளியே உள்ள பொதுமக்களின் காணிகளையும் சுவீகரிப்பதற்கு கடற்படையினர் கோரியிருந்தனர். ஆனாலும் குறித்த காணியை நிலஅளவை செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில், உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியேயுள்ள காணியை, துப்புரவு செய்வதற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுமக்கள் முயன்ற போது, பொலிஸாரால் அவர்கள் தடுக்கப்பட்டனர். 
 
இதனையடுத்து பொலிஸா ருக்கு எதிராகவே, காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர்கள் முறைப்பாட்டை பதிவுசெய்தனர். இதற்கு மேலதிகமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையிலும் அவர்கள் நேற்று முறையிட்டுள்ளனர்.

ad

ad