புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2015

ஃபோக்ஸ்வேகன் மோசடியை அம்பலப்படுத்திய தமிழர்!

ஜேர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார்களில் மாசுகட்டுப்பாடு மோசடியில் ஈடுபட்டதை சென்னையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தான் அம்பலப்படுத்தியுள்ளார்.
சென்னையை சேர்ந்த அரவிந்த்
திருவேங்கடம், அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழக பேராசிரியராக உள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள அவர், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் காரை வாடகைக்கு எடுத்துள்ளார்.
சக பேராசிரியர் மார்க் பெஸ்க் உடன் அவர் பயணம் மேற்கொண்ட போது, ஃபோக்ஸ்வேகன் காரில் வெளியேறும் புகையில், காற்றை மாசுப்படுத்தும் மோனோநைட்ரஜன் ஆக்சைட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், காரில் இருந்து வெளியேறும் மாசு அளவு ஐரோப்பிய தர நிர்ணயத்தை விட 20 மடங்கு அதிகம் இருந்ததும் தெரியவந்தது.
ஃபோக்ஸ்வேகன் கார் வெளியிடும் புகையில் காரீயத்தின் அளவை குறைத்து காட்டுவதற்கென தனி சாப்ட்வேரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே தயாரித்துள்ளதை அரவிந்த் திருவேங்கடம் ஆதாரத்துடன் வெளியிட்டார்.
இதை மோசடி அம்பலமானதை தொடர்ந்து அதன் சி.இ.ஓ ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad