புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2016

ஆளுநருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது, தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

ad

ad