புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2016

66 பேர் உயிரிழப்பு ; மூன்றரை இலட்சம் பேர் முகாம்களில் தஞ்சம்

சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட அனர்த்­தங்­களின் கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை தொடர்ந்தும்
அதி­க­ரித்த வண்­ண­முள்­ளது. இதன்­படி இது­வ­ரைக்கும் 66 பேர் உயி­ரி­ழந்து உள்­ளனர். கொழும்பு நகர் பகு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்
30 ஆயிரம் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.நாட­ளா­விய ரீதியில் ஒரு இலட்­சத்து 5 ஆயி­ரத்து 360 குடும்­பங்­களை சேர்ந்த 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை­யி­லான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 3 இலட்­சத்து 19 ஆயிரம் 507 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.
இவர்கள் 602 முகாம்­களில் தஞ்சம் புகுந்­துள்­ளனர்.இதே­வேளை இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கு உரிய வகையில் நிவா­ரணம் கிடைக்­க­ப்பெ­றாமல் இருப்­ப­தாக பொது மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்மேலும் மண்­ச­ரிவு மற்றம் வௌ்ள அனர்த்தம் கார­ண­மாக 3500 க்கும் மேற்­பட்ட வீடு கள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளன. அத்­துடன் ஒரு இலட்சம் ஏக்கர் நிலக்­கா­ணிகள் முழு­மை­யாக நீரில் மூழ்­கி­யுள்­ளன.
மேலும் சுமார் 50 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட ஏக்கர் நில விவ­சாய காணிகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­மை­யினால் விவ­சா­யிகள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளை எதிர்­கொண்­டுள்­ளனர்.ரோணு சூறா­வளி காற்­றுடன் தாழ­முக்கம் காங்­கே­சந்­து­றை­யி­லி­ருந்து 950 கிலோ மீற் றர் தூரத்தில் பய­ணித்­துள்­ளது. இதன்­கா­ர­ண­மாக இன்னும் இரண்டு நாள்­களில் கால­நிலை வழ­மைக்கு திரும்பும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.
மேலும் வெள்ள நீர் வடிந்­தோ­டா­மையின் கார­ண­மாக வெல்­லம்­பிட்­டி, கொலன்­னாவை,
பேலி­ய­கொட, தொட்ட­லங்க, களனி, அவி­சா­வளை, கடு­வலை, பிய­கம மற்றும் வத்­தளை ஆகிய பிர­தேச நிலை­மைகள்
பெரும் மோச­மாக காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் கடு­வளை களனி அதி­வேக நெடுஞ்­சாலை பாதைகள் முழு­மை­யாக நீரில் மூழ்­கி­யுள்­ளன.
அது­மாத்­தி­ர­மின்றி களனி கங்­கையின் நீர்­மட்டம் 7.6 அங்­கு­லத்­தி­லி­ருந்து 6 வரை குறை­வ­டைந்­துள்­ளது. எனவே இன்னும் சில தினங்­களில் வௌ்ளம் வடிந்­தோடும் என்று மக்கள் எதிர்­பார்த்த வண்­ண­முள்­ளனர்.இதற்கு அப்பால் வௌ்ளம் பெருக்­கெ­டுத்­துள்ள தரு­வா­யிலும் தமது உடை­மை­களை பாது­காக்கும் நோக்­குடன் பலர் வீட்டு அரு­கி­லேயே உள்­ள­ளனர்.
இருந்­த­போ­திலும் இரா­ணுவம் அவர்­களை வெளி­யேற்­றிய வண்­ண­முள்­ளனர். மேலும் குடும்­பத்­துடன் அனர்த்தம் ஏற்­பட்­டுள்ள இடங்­களை பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கு இரா­ணுவம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.
கொழும்பு மாவட்டம்
கொழும்பு நகர் பகு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 50 ஆயிரம் பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். 30 ஆயிரம் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதி­க­ளவில் கொலன்­னாவை மற்றும் வெல்­லம்­பிட்­டிய பகு­தி­க­ளி­லேயே பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.
கொழும்பு மாவட்­டத்தின் கடு­வலை , அவி­சா­வளை ,இரத்­ம­லானை கோட்டே ஹோமா­கமை பிர­தே­சங்­க­ளிலும் பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­படி கொழும்பு மாவட்­டத்தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களின் எண்­ணிக்கை 41 ஆயி­ரத்து 749 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மேலும் ஒரு இலட்­சத்து 85 ஆயி­ரத்து 827 பேர் 86 முகாம்­களில் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.கம்­பஹா , களுத்­துறை
இதே­வேளை கம்­பஹா மாவட்­டத்தில் களனி மல்­வானை பிய­கம வத்­தளை உள்­ளிட்ட பகு­தகள் பெரும் பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ளன. இதன்­படி கம்­பஹா மாவட்­டத்தில் 30 ஆயி­ரத்து 974 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 26 ஆயி­ரத்து 514 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கள­னியில் மாத்­திரம் 28 ஆயி­ரத்து 178 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். களுத்­துறை மாவட்­டத்தில் 9240 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
முழு நாட்­டிலும் பாதிக்­க­பட்­டுள்ள 4 இலட்சம் பேர்­களில் சுமார் 3 இலட்சம் பேர் மேல் மாகா­ணத்தில் பதி­வா­கி­யுள்­ளன. ஆகவே இயற்கை சீற்­றத்­தினால் அத­க­ள­வி­லான பாதிப்­புகள் கொழும்பு , கம்­பஹா மாவட்­டத்­தி­லேயே பதி­வா­கி­யுள்­ளன. இருந்­த­போ­திலும் உயி­ரி­ழப்­புகள் குறைந்­த­ள­வி­லேயே பதி­வா­கி­யுள்­ளன.கேகாலை ,இரத்­தி­ன­புரிஇதே­வேளை அர­நா­யக்க மற்றும் புளத் கொகு­பிட்­டிய மண்­ச­ரிவு கார­ண­மாக ஏற்­பட்ட உயி­ரி­ழப்­புகள் 36 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
மேலும் 144 க்கும் மேற்­பட்­டோரை காண­வில்லை. குறித்த பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் சிக்­குண்­டுள்­ள­வர்­களை மீட்­ப­தற்­காக 300 க்கும் மேற்­பட்ட இரா­ணுவ படையின் கள­மி­றங்­கி­யி­ருந்­தனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. எனினும் இடைக்­கி­டையில் ஏற்­ப­டு­கின்ற மழை கார­ண­மாக மீட்பு பணிகள் பெரும் இடை­யூறு ஏற்­பட்ட வண்­ண­முள்­ளன. கேகாலை மாவட்­டத்தில் 16 ஆயி­ரத்து 737 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 5349 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.
இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் கடும் காற்று , மழை கார­ண­மாக 2859 குடும்­பங்­களை சேர்ந்த 12ஆயி­ரத்து 172 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 6449 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.மலை­யகம்கண்டி மாவட்­டத்தில் கடு­கண்­ணாவ பிர­தேத்தில் பாரிய மண்­ச­ரிவு அனர்த்தம் ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் ஆறு பேர் மண்­ச­ரிவில் சிக்­குண்­டனர். அதே­போன்று தெல்­தொடை, நாவ­லப்­பிட்­டிய, கல­கெ­தர போன்ற பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு ஏற்­பட்­டது.
இருந்­த­போ­திலும் தற்­போ­தைக்கு மண்­ச­ரிவு அபா­யமே பெரும் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது.களு­வானை, லிந்­துலை பகு­தி­க­ளிலும் மண்­ச­ரிவு ஏற்­பட்­டது.
மேலும் கண்டி மாவட்­டத்தில் 3795 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். நுவ­ரே­லியா மாவட்­டத்தில் 754 குடும்­பங்­களை சேரந்த 3132 பேர் மண்­ச­ரிவு கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அத்­துடன் மாத்­தளை மாவட்­டத்தில் பாதிப்பு குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ளது.
வடக்கு ,கிழக்குவடக்கு மாகா­ணத்தில் மாத்­திரம் 11 ஆயி­ரத்து 301 குடும்­பங்­களை சேர்ந்த 37 ஆயி­ரத்து 550 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் வடக்கில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லேயே மிகவும் மோச­மான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. இதன்­பி­ர­காரம் 5464 குடும்­பங்­களை சேர்ந்த 18 ஆயி­ரத்து 265 பேர் பாதிப்­ப­டைந்து 1163 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். யாழ்ப்­பா­ணத்தில் மாத்­திரம் ஆயி­ரத்து 572 குடும்­பங்­களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் வௌ்ள பெருக்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். யாழ் நக­ரி­லேயே அதி­க­ளவில் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.
குரு­நாகல் , புத்­தளம்
வடமேல் மாகா­ணத்தில் புத்­தளம் மாவட்­டத்­திற்கே அதி­க­ள­வி­லான சேதம் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக 8906 குடும்­பங்­களை சேர்ந்த 33 ஆயிரம் 788 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
குரு­நாகல் மாவட்­டத்தில் 2000 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 2000 க்கும் மேற்­பட்டோர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.
கால­நிலை அறிக்கைரோணு சூறா­வளி காற்றுடன் தாழமுக்கம் கங்கேசந்துறையிலிருந்து 950 கிலோ மீற்றர் தூரத்தில் பயணித்துள்ளது. இதன்காரணமாக இன்னும் இரண்டு நாள்களில் காலநிலை வழமைக்கு திரும்பும் எனினும் தற்போதைக்கு நாட்டின் மேல் ,வடமேல் ,மத்திய மற்றும் சப்ரகமுவ பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தின் 2 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியகூறு உள்ளன. அத்துடன் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 வரை அதிகரிக்கும் வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மத்திய ,மேல் ,சப்ரகமுவ மாகாணங்களுக்கு தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

ad

ad