புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2016

தி.மு.க.வின் ஆட்சிக் கனவைத் தகர்த்த பா.ம.க.! - வாக்கு கணக்கு

டந்த காலங்களில் அதிமுக- திமுக என மாறி மாறி கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வந்த பாமக, இந்த தேர்தலில்
தனித்தே போட்டியிட்டது. 234 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அதிமுக- திமுக கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டது பாமக. இதில் பெரும் பாதிக்கப்பட்டது திமுக கூட்டணி கட்சிகள்தான். 27 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பறித்த பாமக, பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. 85 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது பாமக.

இதில் குறிப்பிட்டு சொல்லும்படியானால், கும்மிடிப்பூண்டி தொகுதியில் 89,332 வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி பெற்றாலும், திமுக 65,937 வாக்குகள் பெற்றதோடு, பாமக 43,055 வாக்குகள் பெற்று திமுக வெற்றியை பறித்தது. திருத்தணி தொகுதியில் 89,889 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வெற்றி பெற்றது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 68,025 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. காங்கிரஸ் தோல்விக்கு பாமக பெற்ற 29,596 வாக்குகளே காரணமாக அமைந்துவிட்டது. பூந்தமல்லி தொகுதியில் அ.தி.மு.க 1,03,952 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், திமுக 92,189 வாக்குகள் பெற்றது. இந்த தொகுதியில் பா.ம.க 15,827 வாக்குகள் பெற்று திமுக வெற்றியை பறித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க  பெற்ற வாக்குகள் 1,01,001. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 90,285 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. இந்த தொகுதிகளில் பா.ம.க 18,185 வாக்குகள். 

திருப்போரூர் தொகுதியிலும் பாமகவால் திமுக வெற்றி பறிபோனது. இந்த தொகுதியில் அ.தி.மு.க 70,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், தி.மு.க 69,265 வாக்குகள் பெற்றது. ஆனால் பா.ம.க பெற்ற வாக்குகளோ 28,125. அரக்கோணம் தொகுதியில் பாமக பெற்ற 20,130 வாக்குகளாலே திமுகவின் வெற்றி நழுவி போனது. அ.தி.மு.க 68,176 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், தி.மு.க 64,015 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. சோளிங்கர் தொகுதியில் பாமக 50,827 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வெற்றியை பறித்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க 77,651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 67,919 வாக்குகள் பெற்றது. கே.வி.குப்பம் தாெகுதியில் அ.தி.மு.க 75,612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு 65,866 வாக்குகள் கிடைத்தாலும், பா.ம.க.வுக்கு கிடைத்த 13,046 வாக்குகளே திமுக தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஜோலார்பேட்டை தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 17,516 வாக்குகளே திமுகவின் தோல்வி காரணம். இந்த தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு 82,525 வாக்குகளும், தி.மு.க.வுக்கு 71,534 வாக்குகளும் கிடைத்தது. இதன் வாக்கு வித்தியாசம் 10,991 மட்டுமே. ஊத்தங்கரை தொகுதியில் 23,500 வாக்குகள் பெற்ற பாமக, திமுக வெற்றியை வெறும் 2,613 வாக்குகளில் பறித்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க 69,980 வாக்குகளும், தி.மு.க 67,367 வாக்குகளும், பா.ம.க 23,500 வாக்குகளும் பெற்றன. பர்கூரில் 982 வாக்கில் திமுக வெற்றியை இழந்தது. இதற்கு காரணம் பாமக பெற்ற 18,407 வாக்குகளே. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக 80,650 வாக்குகள் பெற்றது. பாலக்கோட்டில் அதிமுக 70,859 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. 
திமுக 65,596 வாக்குகளும், பாமக 31,612 வாக்குகளும் பெற்றன. அதிமுக- திமுக வாக்கு வித்தியாசம் 5,263. ஆரணி தொகுதியில் திமுக 7,327 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தொகுதியில் அதிமுக 94,074 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், பாமக பெற்ற 12,877 வாக்குகளே திமுகயை வீழ்த்தியது. இந்த தொகுதியில் திமுகவுக்கு 86,747 வாக்குகள் கிடைத்தன.

செய்யாறு தொகுதியில் 77,766 வாக்குகள் பெற்று அதிமுக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 69,239 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வி பாமக பெற்ற 37,491 வாக்குகளே காரணம். வானூர் தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 27,240 வாக்குகளே திமுக தோல்விக்கு காரணம். அதிமுக 57,638 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுகவுக்கு 48,700 வாக்குகள் கிடைத்தது. விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 47,130 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. அதிமுக 69,421 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாமகவுக்கு கிடைத்த 36,456 வாக்குகளே திமுக தோல்விக்கு வழிவகுத்தது. கெங்கவல்லி தொகுதியில் பாமக பெற்ற 10,715 வாக்குகளே திமுக தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த தொகுதியில் அதிமுகவுக்கு 74,301 வாக்குகளும், திமுகவுக்கு 72,039 வாக்குகளும் கிடைத்தன.

ஓமலூர் தொகுதியில் பாமக 48,721 வாக்குகள் பெற்று வெற்றி- தோல்வியை நிர்ணயித்தது. அதிமுக 89,169 வாக்குகளும், திமுக 69,213 வாக்குகளும் பெற்றன. மேட்டூர் தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த வாக்குகள் 49,939. திமுக 61,409 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. அதிமுக 65,934 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. சேலம் மேற்கு தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 29,982 வாக்குகளால் திமுக வெற்றி பறிபோனது. இந்த தொகுதியில் அதிமுக 80,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுகவுக்கு 73,508 வாக்குகள் கிடைத்தது. அந்தியூர் தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த 11,570 வாக்குகளால் திமுக வீழ்ந்தது. அதிமுக 71,575 வாக்குகளில் வெற்றி பெற்றாலும், திமுகவுக்கு 66,263 வாக்குகள் கிடைத்தன. பண்ருட்டி தொகுதியில் அதிமுக 72,353 வாக்குகளில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பாமக பெற்ற 18,666 வாக்குகள் திமுகவின் வெற்றியை பறித்தது. இந்த தொகுதியில் திமுகவுக்கு 69,225 வாக்குகள் கிடைத்தன. விருத்தாசலத்தில் அதிமுக 72,611 வாக்குகளில் வெற்றி பெற்றது. திமுகவுக்கு 58,834 வாக்குகளும், பாமகவுக்கு 29,340 வாக்குகளும் கிடைத்தன. சிதம்பரம் தொகுதியில் பாமகவுக்கு 24,226 வாக்குகள் கிடைத்தது. அதிமுக 58,543 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும் வெறும் 1506 வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக தோல்வியை தழுவியது. இந்த தொகுதியில் பாமகவுக்கு கிடைத்த வாக்குகள் 24,226.

குன்னம் தொகுதியில் அதிமுக 78,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுக 59,422 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பாமக பெற்ற 37,271 வாக்குகளே காரணம். சீர்காழி தொகுதியில் பாமக 14,890 வாக்குகள் பெற்றது. அதிமுக 76,487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுக 67,484 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியது. மயிலாடுதுறையில் அதிமுக 70,949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாலும், திமுக 66,171 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது. இதற்கு பாமகவுக்கு கிடைத்த 13,115 காரணமாக அமைந்துவிட்டது. 

இது குறித்து திமுக மாணவர் அணி மாநில செயலாளர் இள.புகழேந்தியிடம் கேட்டபோது, வட மாவட்டங்களில் பாமக ஓரளவு வாக்குகள் பெறுவதற்கு காரணமே சாதி பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்ததுதான். சில தொகுதிகளில் பணமும் கொடுத்தார்கள். அவர்களின் சாதி பிரசாரம் அந்த மக்களிடம் எடுபட்டது. இதுதான் காரணம்" என்கிறார்.

பாமக முன்னாள் எம்எல்ஏ எதிரொலி மணியனிடம் பேசியபோது, சாதியை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. அப்படி பார்த்தால் எங்கள் சமூகம் இல்லாத பல கிராமங்களில் ஐம்பது ஓட்டு, நூறு ஓட்டு என பாமகவுக்கு விழுந்துள்ளது. ஐயா ராமதாசை முன்னிறுத்தியபோதெல்லாம் சாதிக் கட்சி தலைவர் என்றார்கள். எங்கள் ஐயா அன்புமணி வந்தபிறகு பொதுவான தலைவராக மக்கள் பார்க்க தொடங்கி விட்டனர். அதன் வெளிப்பாடுதான் 23 லட்சம் வாக்குகள். இப்போது 50 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். வரும் தேர்தல்களில் 100 சதவீதத்தை எட்டிவிடுவோம். இந்த தேர்தலில் திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளும் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் ஏராளமான தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பார்கள். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் ஒவ்வொன்றும் மிக நேர்மையானவை" என்றார்

ad

ad