புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2019

பிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசுகிறார்கள்! – மாவை

தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.



வலி.மேற்குப் பிரதேச சபை மண்டபபத்தில் நேற்று இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் போராட்ட வரலாற்றைக் கூறிய மாவை சேனாதிராஜா, அவருடன் சேர்ந்து இயங்கிய சம்பவங்களையும் பதிவு செய்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அமிர்தலிங்கம் இந்தியாவில் இருந்தபோது அனுப்பிய கடிதம் ஒன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் சிறைசெல்ல நேரிட்டது. அது தொடர்பில் மயிலிட்டி துறைமுகத்துக்கான நிகழ்வில் கலந்து கொண்ட அரச தலைவரிடமும் நான் தெரிவித்தேன். அமீரண்ணன் தம்பியைச் (பிரபாகரன்) சந்தித்தார் என்பது அவர் எவ்வளவு தூரம் அவர்களை நேசித்தார் என்பதையும், அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பதையும் அறியமுடியும்.

அவர் இந்தியாவில் இருக்கும்போதும் அவர்ளை ஊக்கப்படுத்தினார். ஆனால் காலம் தவறாகக் கையாளப்பட்டிருக்கிறது. அல்லது இன்றுவரையும் அவர் இந்த இயக்கத்தை கொண்டு நடத்தியிருக்ககூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும். பலருக்கு அது தெரியாது எனக்குத் தெரியும்.

என்னால் வராலாற்றை எழுதமுடியும். எல்லாவற்றையும் எழுதுவது கடினமாக இருக்கிறது. அந்த வரலாற்றை வலியுறுத்தி சொல்லச் சொல்கிறார்கள் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். புலிகள் இயக்கத்துடன் நாங்கள் எப்படி இயங்கினோம் என்பதை நான் இப்போது சொல்லப்போனால் நாடு தாங்கிக்கொள்ளுமோ தெரியாது. ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்.

நான் சென்ற மாதத்திலே பழநெடுமாறனைச் சந்தித்தபோது, அவரும் அந்த விடயங்களை எழுதித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனபடியால் வரலாறுகளைத் திரித்து மறந்து குற்றஞ்சுமத்தி, பிரபாகரனுடைய நிழலைக்கூடத் தரிசிக்காதவர்கள், தெரியாதவர்கள், காணாதவர்கள் எல்லாம் இப்போது அதிகமாகப்பேசுகிறார்கள்” – என்றார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்பற்றி அறிந்திருந்தும் மைத்திரிபால சிறிசேன மௌனமாக இருந்தார். இனக் குரோதங்களால் அன்றுதொடக்கம் இன்றுவரை குரிதி சிந்தியே பயணிக்க வேண்டியுள்ளது” – என்றார்

ad

ad