தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, 2.3 வருடங்களில் அரசியல் தீர்வு கிடைக்குமென கூறினார். தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறுவார்கள் என அவர் நினைக்கின்றார். ஆனால், இது தேர்தலை கருத்திற்கொண்டு அவர் பேசிய விடயமென்பது தமிழ் மக்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.
தமிழர்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத் தரப்பினர் கூறுவதை இனியும், தமிழர்கள் நம்ப மாட்டார்கள்.
அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்