20 ஜூலை, 2019

ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இளைஞர்கள் இருவரும் விபத்து ரயில் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், ரயில வருவதை அவதானிக்காமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புகையிர அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.