புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 நவ., 2019

மீளாய்வு செய்யும் முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் அரசாங்கத்தின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும் அரசாங்கத்தின் முடிவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் , சர்வதேச அளவில் நாட்டைப் பற்றி எதிர்மறையான பிம்பம் இருந்த நேரத்தில், 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதை அடுத்து இலங்கைக்கு ஆதரவாக நிலைமை மாறியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அந்த தீர்மானத்தை அடுத்தே இலங்கையோடு இணைந்து பயணிக்க பல நாடுகள் இணக்கம் தெரிவித்ததாகவும் கூறினார்.

பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்றாலும் அலைகளைத் திருப்பி எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்வது விவேகமானதாக நாங்கள் கருதவில் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூட்டமைப்பை சந்திக்க இணக்கம் தெரிவித்தால் நாமும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.