புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2020

வட, கிழக்கின் மாற்று அணி நாம்; மார்தட்டுகிறார் வளர்த்தகடா விக்கி

மிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்ற வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது.

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணி கட்சி செயலாளரும், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



இன்று (09) கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

ஒரு சில தனி நபர்களின் விருப்பு, வெறுப்புக்கள், பதவி மோகங்களுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை கொள்கை அடிப்படையில் நிறுவனமயப்படுத்தி அகத்திலும் புலத்திலும் உள்ள சாதாரண மக்கள் முதல் புத்திஜீவிகள் வரை அனைவரையும் உள்வாங்கி முன்னெடுத்து செல்வதற்கு மாற்று அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களினதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நீண்ட பயணத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நன்னாளாக இன்றைய நாள் அமைகின்றது. இதனை சீரிய முறையில் முன்னெடுத்துச்செல்லவேண்டிய பணி உங்கள் அனைவரையும் சாரும். குறிப்பாக இளையோர்கள் கைகளில் இது தங்கியுள்ளது.



நான் முதலமைச்சராக இருந்து தமிழ்த் தேசீய கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பட்டுக்கொண்டிருந்தபோதே, எனது தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்கும் எதிர்பார்ப்புக்கள் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கொள்கை முரண்பாடு காரணமாக விலகி தனித் தனியாக செயற்பட்டுவந்த கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் தான் நான் தமிழ் மக்கள் கூட்டணியை 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 அன்று உருவாக்கி இருந்தேன்.


அன்று முதல் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்பதே வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பாக இருந்து வந்திருக்கின்றது. எப்போது வரும் என்று ஊடகங்கள் கேட்டபோது மக்களே அதைத் தீர்மானிப்பார்கள் என்று பதில் இறுத்துள்ளேன். மக்களின் முடிவு இன்று அரங்கேறுகின்றது. - என்றார்.

ad

ad