|
-
21 டிச., 2012
|
உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி
மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில்
20 டிச., 2012
வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.
மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடிகுஜராத் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்த-ன் வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. இதில் காலை முதலே பாஜக முன்னிலை பெற்றிருந்தது.
பாஜக 109 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் மூன்றாம் முறையாக ஆட்சியை பிடிக்கிறார் நரேந்திர மோடி என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
|
வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்றிய பெண்மணி
வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்ட ஐவரை பெண்மணி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் கெக்கிராவ ஆண்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பலாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சென்ற ஜீப் வண்டி நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்.எம். நிலந்தி ரத்நாயக்க (35 வயது) என்ற ஒரு குழந்தையின் தாய் குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளார்.
மேற்படி அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.
குஜராத்: 107 தொகுதிகளில் பாஜக முன்னிலைபாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் கடந்த 13 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (19.12.2012) காலை தொடங்கியது.
பாஜக 107 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் கோசுபாய் பட்டேல் தொடங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைமுதல்வர் பிரேம்குமார் துமல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்த-ல் 74.6 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை இன்று (20.12.2012) காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
லண்டனில் சிங்கக் கொடியை பள்ளிக்கூடத்தில் இருந்து அகற்றிய 14 வயது மாணவன் !
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள முன்னணிப் பாடசாலை நிகழ்வு அரங்கு ஒன்றில் பல நாட்டுக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளது. பல உலக நாடுகளின் கொடிகளுக்கு மத்தியில் இலங்கையின் சிங்கக் கொடியும் இங்கே வைக்கப்பட்டிருந்ததை அங்கே கல்வி பயிலும் தமிழ் மாணவன் ஒருவன்
|
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 15 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 68 ஆயிரத்து 904 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 ஆயிரத்து 231 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 753 பேர் 102 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், 358 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 907 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)