இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர். தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றையும் முன்வைத்தார். குறித்த யோசனையை சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். |