-
25 பிப்., 2013
மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட இரு நாட்டு மீனவர்களையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துள்ளதுடன் இப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
24 பிப்., 2013
டோனி இரட்டை சதம் - அபார சாதனை
சச்சின்,சேவாக் வரிசையில் 200 ரன் அடித்த 9வது இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி.74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டோனி முதல் முறையாக இரட்டைச்சதம் அடித்தார். ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டைச்சதம் அடித்துள்ளார். 231 பந்துகளில் 200ரன்களை விளாசினார் இந்திய அணியின் கேப்டன் டோனி.

மத்திய அமைச்சர்கள் வீடுகள் முற்றுகை : ஜி.கே.வாசன் கண்டனம்
இலங்கை விவகாரத்தில் சத்தியமூர்த்தி பவன், மத்திய அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிடுவதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் விளம்பரம் தேடும் முயற்சியை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என கூறி யுள்ளார்
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதப்படும் இரு சந்தேக நபர்களின் மாதிரி படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி இருந்த போது, இனந்தெரியாத நபர்கள் மூவர் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலசந்திரனின் புகைப்படங்கள் ஒரு மணி நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! –டிபிஎஸ்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பது கடினமான காரியமாக இருக்கும் என்று டிபிஎஸ் ஜெயராஜின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
23 பிப்., 2013
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)