-

13 டிச., 2025

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு

www.pungudutivuswiss.com

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு | Guy Parmelin Elected As Swiss President

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஜனாதிபதியாக, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெரும்பான்மை ஆதரவு

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, நாட்டை ஆள்வது ஏழு கவுன்சிலர்கள் கொண்ட சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் என்னும் அமைப்பாகும். 

ஆண்டுக்கு ஒரு முறை, இந்த கவுன்சிலின் உறுப்பினர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு, புதன்கிழமை, அதாவது, டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்றது. 

மிஸ் சுவிட்சர்லாந்து அழகிக்கு ஏற்பட்டுள்ள பயங்கர முடிவு

மிஸ் சுவிட்சர்லாந்து அழகிக்கு ஏற்பட்டுள்ள பயங்கர முடிவு

வாக்கெடுப்பில், சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினரான, கய் பார்மலின் (Guy Parmelin) வெற்றி பெற்றுள்ளார். 

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்டவர் சுவிஸ் ஜனாதிபதியாக தேர்வு | Guy Parmelin Elected As Swiss President

வாக்கெடுப்பில் 210 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், பார்மலினுக்கு 203 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், சுவிஸ் அரசியல் வரலாற்றில், இந்த அளவுக்கு பெரும்பான்மையுடன் யாரும் வெற்றிபெற்றதில்லை!

மோசமான தகவல் என்னவென்றால், பார்மலின், சர்ச்சைக்குரிய, புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணைகளை அவ்வப்போது முன்வைக்கும், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட, வலதுசாரிக் கட்சியான, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான்.

ad

ad