புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2013


பாலசந்திரனின் புகைப்படங்கள் ஒரு மணி நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது! –டிபிஎஸ்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பது கடினமான காரியமாக இருக்கும் என்று டிபிஎஸ் ஜெயராஜின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தப்புகைப்படங்களில் பாலசந்திரன் உயிருடன் உள்ளமையும் பின்னர் கொல்லப்பட்ட காட்சிகள் உள்ளன.
இந்த புகைப்படங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்களால், சனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் சோன் தயாரிப்பாளர் கலும் மெக்ரேக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து நோ பயர் சோன் ஆவணப்படம் எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை குறித்த புகைப்படங்கள் மூலம் ஜனநாயகத்துக்காக போராடும் இலங்கையின் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களால், இலங்கையின் உண்மையான நிலவரங்களை வெளிக்காட்டும் வகையில் தம்மிடம் கையளிக்கப்பட்டதாக நோ பயர் சோன் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன ஆய்வின்படி பாலசந்திரன் தொடர்பான புகைப்படங்கள், இலங்கையில் இறுதியுத்தம் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி ஒரு மணித்தியாலம் 45 நிமிட இடைவெளிகளில் எடுக்கப்பட்டுள்ளன.
பாலசந்திரன் உயிருடன் உள்ள புகைப்படம் முற்பகல் 10.14 க்கு எடுக்கப்பட்டுள்ளது.
அவருடைய இறந்த உடல் கிடக்கும் காட்சியைக்கொண்ட படம் 2009, மே 19 ஆம் திகதி பகல் 12.02க்கு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தப் படங்களின் மூலம் பாலசந்திரன் போரின் போது இடையில் சிக்கி உயிரிழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக நோ பயர் சோன் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad