புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2013


சாத்தூர் ராமச்சந்திரன் மீது 32 லட்சம் மோசடி புகார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கொடிக்குளத்தை சேர்ந்தவர் கே.எம்.கோஸ். தி.மு.க. பிரமுகரான இவர், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் மீது
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நஜ்மல் கோடாவிடம் புகார் செய்தார்.

அந்த புகாரில், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருகிறோம் என்று முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் என்னிடம் கூறி ரூ.32 லட்சம் பெற்றுள்ளனர். 
ஆனால் சீட் வாங்கித்தர வில்லை. இதனையடுத்து பணத்தை திரும்பத்தருமாறு கேட்டேன். ஆனால் பணம் தர மறுத்ததுடன் மிரட்டல் விடுத்தனர் என்று குறிபிட்டு இருந்தார். இந்த புகாரை கடந்த 11.12.2012 அன்று கொடுத்தார் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நஜ்மல் கோடா இதுபற்றி விசாரணை நடத்த அருப்புக்கோட்டை போலீசுக்கு உத்தரவிட்டார். 
அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது உறவினர் சுப்பாராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு கிளையில் கே.எம்.கோஸ், தனது பணத்தை பெற்றுத்தரக் கோரி வழக்கு தொடர்ந்து, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad