எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது
-
17 மார்., 2015
நான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழிந்த` உதவி கமிஷனர்
!
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு
சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் காவலர் ஒருவரிடம் செல்போனில் பேசிய கிளுகிளுப்பான பேச்சு
பட்மிண்டன் சுவிஸ் ஓபன் ஐ இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வென்றார்
சுவி பாசலில் நடைபெற்ற இந்த சுற்றின் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் .முன்ன்டதாக மற்றுமொரு இந்திவீரர் ஜெயராமை அரை இறுதியில் வென்றுள்ளார்
16 மார்., 2015
19 க்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக மாறும்,
2. இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
3. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
4. ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
5. நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
6. ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
7. இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
8. 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
9. நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும். ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
10. பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு இருக்கும். என்பதாகும். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
15 மார்., 2015
வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய தனித்துவத்தை உலகறியச்செய்ய வேண்டும்; வடக்கு முதல்வர்
வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை
வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவோம்; விஜயகலா
வடக்கு மாகாண முதலமைச்சரின் வழியிலேயே நாங்களும் பின்தொடர்கின்றோமே தவிர எங்களுக்கு தரப்பட்ட அதிகாரங்களை தனிப்பட்ட
அரசியல் கைதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும்; தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு
தாயும் மகளும் ஒரு வருடத்தின் பின் இணைவு
பிரித்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரியும் மகள் விபூசிகாவும் நேற்று இணைந்து கொண்டர்.
தமிழர்களின் மரபை மீறிய மோடியின் யாழ்பாண பயணம்; ஈழத்தமிழர்கள் வேதனை
இரண்டு நாள் பயணமாக கடந்த 13, 14ஆம் தேதிகளில் இலங்கை சென்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அனுராதபுரம், தலைமன்னார், தமிழர்களின் தலைநகரான
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை விரட்டியடித்தது மேற்கிந்திய தீவுகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் |
14 மார்., 2015
வடக்கு முதல்வர் சி.வி - இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினா
மியான்மரில் படகு விபத்தில் 50 பேர் பலி?
மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)