
எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது எவருக்கு
ம் தெரியாது. கடந்த சனிக்கிழமை(29) லண்டன் Bushey (High Street) Vu Lounge, என்ற உணவகத்தில் ஜெயந்தன் என்ற இளம் குடும்பஸ்தார் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளார். அங்கே 25 வயதுடைய Dequarn Williams என்ற நபருடன் ஜெயந்தன் வாக்குவாதப்பட்டுள்ளார்.இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தபோதே, உணவகத்தில் இருந்தவர் எவரோ பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் பொலிசார் வரவில்லை. இது இவ்வாறு இருக்க ஜெயந்தன் உணவை அருந்திவிட்டு, வெளியே அதாவது சீ-ஷா பாருக்கு செல்லும் ஒரு ஓடைக்குச் செல்ல முற்பட்ட வேளை( உணவகத்தின் பின்புறம்) குறித்த 25 வயது இளைஞர் ஜெயந்தனை அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்று கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த 25 வயது இளைஞர் ஏன் கத்தியோடு உணவகத்திற்கு வரவேண்டும் என்ற பெரும் கேள்வி எழுகிறது. அதாவது இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபராக இருக்கவேண்டும் அல்லவா. தன்னுடன் யாராவது தகறாறில் ஈடுபட்டால், அவர்களை போட்டுத் தள்ளவே இந்தக் கத்தி. இதேவேளை இன் நபர் ஒரு ஆபிரிக்க நபர் எனவும், தோற்றத்தில் மிகவும் சிறியவர் என்றும் கூறப்படுகிறது.
CCTV இல்லாத ஒரு பகுதியாக பார்த்து அவர் ஜெயந்தனை தாக்கியுள்ளார் என்று, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இருப்பினும் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் எல்லாம், Dequarn Williams(25) என்ற இந்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்து விட்டார்கள்.
இவர் தனது Sancroft Close, Northwest (London), லண்டனில் உள்ள வீட்டுக்குச் செல்லாமல், தனது நண்பி ஒருவரின் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். இருந்தாலும் பிரித்தானியப் பொலிசார் சும்மா விடுவார்களா ? அவர் கடைசியாக அழைத்த தொலைபேசி அழைப்பை பாவித்து, அந்த நம்பரைக் கண்டு பிடித்து, அது யாருக்கு சொந்தமானது என்று பார்த்து அந்த வீட்டை சோதனை செய்த வேளை அவர் சிக்கியுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடைக்கலம் கொடுத்த அந்த 30 வயதுப் பண், முதலில் பொலிசாரிடம் பொய் கூறியுள்ளார். யாரும் வீட்டைல் இல்லை என்று கூறி கொலையாளியை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் பொலிசார் அந்தப் பெண்ணையும் கைது செய்து, கொலைக் குற்றவாளியை காப்பாற்ற முயன்றார் என்று, அவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இருப்பினும் அவரை பிணையில் விடுவித்துள்ள நிலையில். Hatfield Magistrates நீதிமன்றில் குற்றவாளியை நிறுத்தி பொலிஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க, அனுமதி கோரியுள்ளனர். வரும் 7ம் திகதி St Albans Crown Court நீதிமன்றத்தில் மேலதிக விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயந்தன் 29ம் திகதி கத்தியால் குத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதியாகி கடந்த 3ம் திகதி டிசம்பர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஜெயந்தனுக்கு கடந்த வருடமே திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனை பொறுத்தவரை 13 வயது பள்ளி மாணவர்கள் தொடக்கம் கத்தியை எடுத்துச் செல்கிறார்கள். லண்டனில் கத்திக் குத்து சம்பவங்கள் சுமார் 350% விகிதத்தால் அதிகரித்துள்ளது. லண்டன் தெருக்கள், பல கொலைகாரர்களால் நிரம்பி வழிகிறது. பல நூறு நாடுகளில் தேடப்படும் கொலைக் குற்றவாளிகள் லண்டனில் வந்து தஞ்சம் அடைந்துள்ள நிலையில். எமது வரிப் பணத்தில் அவர்கள் சொகுசாக வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாது, எங்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது தான் சகிக்க முடியாத விடையமாக உள்ளது.
அவரது ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை பிரார்த்திப்போம்.