புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2015

கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் நரேந்திர மோடி

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண
ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுடன் மதிய போசன விருத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சார முறைபடி, பால் காய்ச்சி வீடுகளை கையளித்தார்.
இதன்போது, கே.கே.எஸ். வீதியின் இரு மருங்கிலும் மக்கள் பெருவாரியாகக் கூடி நின்று இந்தியப் பிரதமரை வரவேற்றனர்.
வீதிகள் தோறும் வாழை மரங்கள் நாட்டப்பட்டுள்ளதுடன், இலங்கை இந்தியக் கொடிகளைத் தாங்கியவாறு மக்கள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கும் இந்தியப் பிரதமரை வரவேற்றனர்.

ad

ad