புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2020

பிரான்சில் இன்று 642 சாவுகள் - 16.000 சாவுகளை நெருங்கும் பிரித்தானியா
சர்வதேசம் 156.000 சாவுகளைத் தாண்டிச் செல்கின்றது. பிரித்தானியா இன்று மட்டும் 900 சாவுகளுடன் கிட்டத்தட்ட 16.000 சாவுகளைத் தாண்டுகின்றது
சுகாதார காப்பகங்களில் அதிக உயிரிழப்புக்கள்: குற்றச்சாட்டுகளுக்குLombardia மாநில ஆளுநர் பதிலளிக்கின்றார்
--------------------------------------------------------------------------
Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana
உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.

கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.

வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.

முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.

Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்

18 ஏப்., 2020

பிரித்தானியாவில் கொரோனா இறப்புகள் அதிகமாக  நடக்கின்றன .  அங்கு மருத்துவவசதிகள் இல்லாமை   கட்டில் பற்றாக்குறை  மருத்துவர்கள் தாதியர்  போதாமை  தொற்றுக்குளானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கூறப்படுவது  போன்ற காரணங்களாலேயே  இறப்புகள் அதிகரிப்பதாக  விமர்சிக்கப்படுகிறது 

கிளிநொச்சி சதோசவில் நடப்பது என்ன?? விசாரணை நடாத்துமாறு மாவட்ட செயலர் உத்தரவு.

.
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை
தமிழ் உறவுகளே சேர்ந்தே பிரார்த்திப்போம்
பிரித்தானியா,பிரான்ஸ் ,கனடா எங்கும் எங்கள் சொந்தங்கள் விடைபெற்று செல்கிறார்கள் .இயந்திரவாழ்க்கை ,நிர்பந்தம். போதும் இறைவா .காப்பாற்று 

வடக்கில் கொரோனா தொற்றுக்கு சுவிஸ் மத போதகரே காரணம் -சவேந்திர சில்வா

வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் வாரங்கள் சில- உண்டியல் போகாது - கையைக்கடிக்கும் - தாயகம் வெடிக்கும், கடிக்கும் ,ஏங்கும், அழும் ,உறவுகள் பிரியும், விசும்பல்கள் ஒலிக்கும் விரிசல்கள் வெடிக்கும் 

புவிசார் அரசியல் விளையாட்டுக்கள்

பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை

சற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு

யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு.
36500 இறப்புக்கள் -உலகையே ஆட்டிப்படைத்த   அமெரிக்கா அழுகிறது .  மலை போல  நாள்தோறும் குவியும் பிணங்கள் -எங்கே   எரிப்பது எங்கே  புதைப்பது -உலகப்பிரசித்தி பெற்ற   நியூயோர்க் சின்னாபின்னம் - நோயாளிகளால் நிரம்பி வழியும்  வைத்தியசாலைகள் - தாதியர்  பற்றாக்குறை  - இரவுபகலாக   பணியில்  மருத்துவர்கள் - செய்வதறியாது   முழிக்கும் ட்ரம் - இத்தாலி 22745ஸ்பெயின்20002 பிரான்ஸ்18703 பிரித்தானியா14607 ஈரான்  4958ஹோலந்து3471 பெல்சியம் 5163சீனா 4636 கனடா 1356சுவிஸ் 1323  இலங்கை 7    உலகம் 325714 

அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட கொடுப்பனவு – 5000 ரூபா பெற தகுதியானவர்கள் விபரம் இதோ

நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோத்தா பேச்சு:போராட்டம் கைவிடப்பட்டது

அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27  இல் கொரோனா தொற்று  முதன்முதலில்  மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில்  பின்னர்  தொடர்ந்து  ஏறுமுகமாக சென்ற  வரைபு கடந்த 17  மார்ச்சில் 1297 ஆக  உச்ச  கட்டிடத்தை  கொடுத்தது  , மார்ச்  19 இல் 1272- மார்ச் 23  இல் 1248 என்ற  உச்சநிலையும்  இருந்தத்த்து    அப்புறம் இறங்குமுகமாகி  இன்று  தான்  அதிகுறைந்த  208  என்ற  எண்ணிக்கையில் காட்டி  நிற்கிறது  இன்னும் இன்றைய  நேரம் முடிவடையவில்லை 
எச்சரிக்கை -புலத்துத்தமிழர் வாழும் நாடெங்கும் கொரோனா தாக்கம் - எதிரொலி -தாயகத்தமிழரே சுயமான பொருளாதார வளத்தை  பெருக்கிக்கொள்ள தொடங்குங்கள்  

17 ஏப்., 2020

விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்கள்: அரசு எச்சரிக்கை

விலை மலிவான பொருட்களுக்காக எல்லை தாண்டி ஷாப்பிங் செல்லும் சுவிஸ் நாட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்

கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை

சற்று முன் : சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று.

பிரான்சின் சாள்-து-கோல் விமான தாங்கி கப்பலில் 1,081 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கொரோனாவினால் பலியான ஈழத்தமிழர்களுக்காக மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி

வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில்
எதிர்வரும்  20  ஆம்  திகதி முதல்  குடும்பத்துக்கு  5000  ரூபா  வழங்கும் திட்ட்துக்கு கிராமசேவகர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள்  என  அறியவருகிறது 
இலங்கை .கொரோனா    நோய் தொற்றுக்கள் 238 ,  குணமானவர்கள் 70. இறந்தோர்  7 

ad

ad