-

27 நவ., 2025

முதன்முறையாக உச்சம் தொட்ட சுவிஸ் சராசரி ஊதியம்: 7024அதிக ஊதியம் வழங்கும் துறை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக சராசரி ஊதியம் மாதம், ஒன்றிற்கு

முதன்முறையாக உச்சம் தொட்ட சுவிஸ் சராசரி ஊதியம்: அதிக ஊதியம் வழங்கும் துறை எது தெரியுமா? | Swiss Average Salary Rise Highest Paid Sector Is

 7,000 சுவிஸ் ஃப்ராங்குகளைத் தாண்டியுள்ளது.

முதன்முறையாக உச்சம் தொட்ட சுவிஸ் சராசரி ஊதியம்

2024ஆம் ஆண்டில் முழுநேரப் பணியாளர்கள் சராசரியாக 7,024 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெற்றதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஊதியத்தைவிட 246 ஃப்ராங்குகள் அதிகமாகும்.

தரவுகளிலிருந்து தெரியவந்துள்ள இன்னொரு விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் ஊதியத்தில் பெரிய வித்தியாசமும் காணப்படுகிறது.

சுவிஸ் மக்கள்தொகையில், குறைந்த ஊதியம் பெறும் 10 சதவிகிதம் மக்களின் ஊதியம், 4,600 ஃப்ராங்குகள். அதிக ஊதியம் பெறுவோரின் ஊதியமோ 12,500 ஃப்ராங்குகள்! 

சுவிட்சர்லாந்து - இந்தியா இடையிலான உறவுப்பாலம்..தூதரகம் குறித்த தகவல்கள்

சுவிட்சர்லாந்து - இந்தியா இடையிலான உறவுப்பாலம்..தூதரகம் குறித்த தகவல்கள்

ஆய்வு நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வங்கித்துறையினர் அதிக ஊதியம் பெற, சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் மற்றும் ஹொட்டல் துறையினர் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள்.

மேலும், ஊதியத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலும் வித்தியாசம் காணப்படுகிறது. ஆண்களைவிட பெண்கள் 8.4 சதவிகிதம் குறைவான ஊதியம் பெறுகிறார்கள்.

சரி, நாட்டிலேயே மிக அதிக ஊதியம் வழங்கும் துறை எது தெரியுமா? 10,723 ஃப்ராங்குகள் ஊதியம் வழங்கும் வங்கித்துறையைவிட, புகையிலைத் துறை கூடுதல் ஊதியம் வழங்குகிறது.

புகையிலைத் துறை வழங்கும் ஊதியம், 14,304 ஃப்ராங்குகள்!

ad

ad