புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஏப்., 2020

சுகாதார காப்பகங்களில் அதிக உயிரிழப்புக்கள்: குற்றச்சாட்டுகளுக்குLombardia மாநில ஆளுநர் பதிலளிக்கின்றார்
--------------------------------------------------------------------------
Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana
உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.

கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.

வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.

முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.

Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்